மாநிலங்களவையிலுள்ள மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையில் 12 எம்பிக்கள் எப்போதும் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவது வழக்கம். தற்போது நியமன எம்பிக்களாக 5 பேர் உள்ள நிலையில் 7 இடங்கள் காலியாக உள்ளன. அவற்றில் 4 இடங்களுக்கு தற்போது மத்திய அரசு நியமன எம்பிக்களை அறிவித்துள்ளது. 


அதன்படி இந்த 4 பேரும் தென்மாநிலங்களைச் சேர்ந்த 4 பேராக உள்ளது கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டு, ஆந்திரா,கர்நாடகா, கேரளா ஆகிய நான்கு மாநிலங்களை சேர்ந்த ஒருவர் நியமன எம்பிக்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 


தமிழ்நாடு- இளையராஜா:


தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக வலம் வருபவர் இளையராஜா. இவர் பல்வேறு வெற்றி படங்களை தந்து தன்னுடைய இசையால் பலரையும் மயங்க வைத்தார். இவர் கலைத்துறையில் ஆற்றிய சிறப்பான சேவை காரணமாக தற்போது மாநிலங்களவைக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார். 


 






கேரளா-பிடிஉஷா:


தடகள உலகில் கால்பதித்த தங்க மங்கை பி.டி.உஷா. இவர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் தற்போது தடகள பயிற்சி அகாடமி நடத்தி பல்வேறு வீரர் வீராங்கனைகளை உருவாக்கி வருகிறார். இவரும் தற்போது மாநிலங்களவை நியமன எம்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். 


 






ஆந்திரா-வி.விஜயேந்திர பிரசாத்:


ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த விஜயேந்திர பிரசாத் பல்வேறு திரைப்படங்களுக்கு கதை எழுதியுள்ளார். இந்திய அளவில் மிகப்பெரிய ஹிட் அடித்த பாகுபலி திரைப்படத்தின் கதையையும் எழுதியுள்ளார். இவரும் தற்போது மாநிலங்களவைக்கு நியமன எம்பியாக தேர்வாகியுள்ளார். 


 






கர்நாடகா-வீரேந்திர ஹெக்டே:


கர்நாடகாவிலுள்ள தர்மாஸ்தல கோயிலின் தர்மதிகாரியாக வீரேந்திர ஹெக்டே பணியாற்றி வந்தார். இவர் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக சமூக சேவை செய்து வருகிறார். குறிப்பாக இவர் கிராமபுற மக்கள் மற்றும் இளைஞர்களை மேம்படுத்த உதவி வந்தார். இவரும் தற்போது நியமன எம்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.


 








மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண