ABP Ideas of India 3.0 LIVE: இந்து மதத்தில் இருந்தே இந்து அடிப்படைவாதத்தை எதிர்க்க வேண்டும் - சசி தரூர்
Ideas Of India 3.0 Live: ஏபிபி நெட்வர்க்கின் “ஐடியாஸ் ஆஃப் இந்தியா” நிகழ்ச்சியின் நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள, ஏபிபி நாடு இணைய செய்தி தளத்துடன் இணைந்திருங்கள்
எந்த நாடும் உற்பத்தி செயல்பாடுகள் இல்லையெனில் வளர முடியாது. சேவைகளை கொண்டு மட்டுமே நாடு வளர்ச்சி அடையும் என்பது அர்த்தமற்ற பேச்சு : அரவிந்த் பனாக்ரியா
ABP Ideas of India 3.0 LIVE
370 சட்டப்பிரிவு ரத்து குறித்து பேசிய உமர் அப்துல்லா
அப்போதைய ஆளுநர் 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்படாது என கூறியதாகப் பேசிய உமர் அப்துல்லா, அப்படியான விஷயத்தை நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று சொன்னார்
ஏபிபி ஐடியாஸ் ஆஃப் இந்தியாவின் முதல் நாள் மாநாடு நிறைவு பெற்றது. மீண்டும் நாளை தொடங்கும்
யாரையும் சிரமப்படுத்தக் கூடாது என, என் அம்மா கூறியிருக்கிறார், தெரியாமல் கூட யாரையும் சிரமப்படுத்தியிருந்தால் , உடனே மன்னிப்பு கேட்பேன் என அமீர்கான் உருக்கமாக தெரிவித்தார்.
"சினிமா என்பது பொழுதுபோக்கு ஊடகம். எனது கதைகளில் முக்கியமான சமூகப் பிரச்னைகளை எழுப்ப வேண்டும் என்று நான் எப்போதும் கேட்டுக்கொள்வேன் என அமீர்கான் தெரிவித்தார்.
நான் கிரணிடம் கதையை வழங்கி,அந்த கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறேன் என்று சொன்னேன். அதற்கு கிரண் தெரிவித்ததாவது, நீ பெரிய நடிகர், நீ என் படத்தில் இருப்பது பொருததமாக என தெரிவித்தர். அதையடுத்து, ஒரே படத்தில் இருவரும் இருக்க கூடாது என புரிந்து கொண்டோம்.
"கிரண் ராவ் மிகவும் நேர்மையான திரைப்பட தயாரிப்பாளர்" என்று அமீர்கான தெரிவித்தார்.
பெரும்பாலான ராமாயண பதிப்புகள் ராமரின் பயணங்களை விவரிக்கின்றன, ராமராஜ்யம் பற்றி விரிவாகப் பேசப்படவில்லை. இது மற்ற நூல்களில் விவாதிக்கப்பட்டுள்ளது. ராமராஜ்ஜியத்தை எப்படிப்பட்ட தலைவர் உருவாக்குகிறார் என்பதை ராமாயணம் கூறுகிறது என ராமராஜ்யம் குறித்து அமிஷ் திரிபாதி கூறினார்.
ஒவ்வொருவருக்கும் அவர்களது குடும்ப மரபைச் சுமந்து செல்லும் பொறுப்பு உள்ளது என நிமய்யா நிறுவனத்தின் இணை நிறுவனர் நவ்யா நவேலி தெரிவித்தார்
அடுத்த தலைமுறைக்கு எது தவறு என்பதை சொல்வதற்காகத்தான் எனது படங்களில் வன்முறைக் காட்சிகளை வைக்கின்றேன். ஒரு மருத்துவர் ஊசி போடும்போது நமக்கு வலிக்கத்தான் செய்யும். ஆனால், அது நமது உடலில் இருக்கும் நோயை குணப்படுத்த உதவுவதைப் போல், எனது படங்களில் அடுத்த தலைமுறையினருக்கு எது தவறு எனச் சொல்வதற்காகத்தான் சண்டைக் காட்சிகள் உள்ளிட்ட வன்முறைக் காட்சிகளை நான் படமாக்குகின்றேன் என இயக்குநர் அட்லி பேசியுள்ளார்.
சமூக ஆர்வலரும் கல்வியாளருமான சோனம் வாங்சுக் மலைகளில் சுரங்கம் தோன்டுவதால் ஏற்படும் ஆபத்துகள் பற்றி பேசினார். ”பெரு நகரங்களில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை முறையானது, லடாக் போன்ற மலைகளின் சூழலியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எளிமையான வாழ்க்கையை வாழுங்கள். மலைவாழ் மக்கள் எளிமையாக வாழலாம்” என தெரிவித்தார்.
நாடாளுமன்ற தேர்தல் இன்னும் அறிவிக்கப்படவில்லை, எனவே எதிர்க்கட்சிகளுக்கு எவ்வளவு நேரம் இருக்கிறது என்பது தெரியவில்லை.
அடுத்த அரசாங்கமாக இருக்கும் என்பதால் எதிர்க்கட்சியை விட்டுவிடாதீர்கள் என்று காங்கிரஸ் எம்.பி சசி தரூர் தெரிவித்தார். அதற்கு பாஜக முன்னாள் எம்.பி சந்திர பிரகாஷ் அகர்வால் தெரிவித்ததாவது, கற்பனைக்கு எல்லையில்லை என சசி தரூருக்கு பதிலளித்தார்
பிரதமர் வேட்பாளராக எந்தவொரு தனிநபரையும் காங்கிரஸ் அறிவிக்கவில்லை என காங்கிரஸ் எம்.பி சசி தரூர் தெரிவித்தார்.
மேலும், தேர்தல் பத்திரம் தொடர்பாக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பானது மிகச் சரியாக மற்றும் நியாயமாக இருந்தது எனவும் தெரிவித்தார்.
"40 ஆண்டுகளில் நிறைய மாறிவிட்டது. குற்றங்கள் குறைந்துள்ளன. குற்றச் செயல்களுக்கு எதிராக யோகி அரசு உடனடி நடவடிக்கை எடுக்கிறது. உ.பி.யில் தொழில் தொடங்குவது மிகவும் எளிதாகிவிட்டது என பாஜக முன்னாள் எம்.பி. சந்திர பிரகாஷ் அகர்வால் தெரிவித்தார்.
பாஜக ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை மற்றும் விலைவாசி உயர்வு அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தெரிவித்தார்.
சிறந்த தொழில்முனைவோராக இருப்பதற்கு, உங்களிடம் நிறைய பணம் இருக்க வேண்டும் அல்லது தொழில்துறை குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டிய அவசியமில்லை.
1980ல், மசாலாப் பொருள்களை அரைத்து, சிறிய பாக்கெட்டுகளில் அடைத்து, கிராமங்களில் விநியோகிக்க ஆரம்பித்தோம். இன்று ராஜேஷ் மசாலா நிறுவனமானது, ஆயிரத்து 500 கோடி வருவாய் உள்ள நிறுவனமாக இருக்கிறது. மக்கள் தாங்கள் பயன்படுத்துவதை மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும். தரத்தில் ஒருபோதும் சமரசம் செய்யக்கூடாது என்கிறார் தொழில்முனைவோர் ராஜேஷ் அக்ரஹாரி.
நவீன சிகிச்சை முறைகளை கும்பல் கட்டுப்படுத்துகிறது. ஆங்கிலேயர்கள் துப்பாக்கிகளால் கொன்றனர். இப்போது மாத்திரைகளால் கொல்லப்படுகிறோம். இயற்கை சிகிச்சை முறைகளை விட சிறந்தது எதுவுமில்லை என ஆயுர்வேத நிபுணர் ஆச்சார்யா மணீஷ் தெரிவித்தார்
"ஜனநாயகத்தை நிலைநாட்டுவது கடினம். அதைக் கடைப்பிடிப்பதும் கடினம். வரலாறு முழுவதும் அதிகாரம் என்பது ஏகபோக வர்த்தகமாகவே இருந்து வருகிறது. இந்திய ஜனநாயகத்தை நிலைநிறுத்த வேண்டும் என்றால், அது குறித்தான சுய விழிப்புணர்வு நமக்குத் தேவை" என்கிறார் சுனில் கில்னானி.
ABP Ideas of India 3.0 LIVE : துணை முதல்வராக எனது பணிகளை முதல்வர் ஷிண்டே அங்கீகரிக்கிறார் - தேவேந்திர ஃபட்னாவிஸ்
ஒவ்வொரு அரசும் ஒவ்வொரு விதமாக செயல்படும். துணை முதல்வராகவும் என்னால் நன்றாக செயல்படமுடியும். முதல்வர் ஷிண்டே என் செயல்பாடுகளை அங்கீகரிக்கிறார் - தேவேந்திர ஃபட்னாவிஸ்
இளைய தலைமுறையில் கற்றல் தேவைகள், கற்றலில் இருக்கும் சவால்கள் ஆகியவற்றைக் குறித்து பேசிவருகிறார் விஜேந்தர் சிங் செளஹான், பேராசிரியர், டெல்லி பல்கலைக்கழகம்
ABP Ideas of India 3.0 LIVE : முடியாது என சொல்லத் தெரிந்திருக்க வேண்டும் - அன்னபூரணி சுப்ரமணியம், ஐஐஏ இயக்குநர்
உங்கள் இலக்குகள் எட்டப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். யாரேனும் சில விஷயங்களை உங்களிடம் திணித்தால், நோ சொல்லத் தெரிந்திருக்க வேண்டும் - அன்னபூரணி சுப்ரமணியம், ஐஐஏ இயக்குநர்
ABP Ideas of India 3.0 : பெண்கள் நம்பகத்தன்மை வாய்ந்தவர்கள் என நிரூபித்துள்ளனர் - நந்தினி ஹரிநாத், துணை இயக்குநர், ISTRAC, ISRO.
Background
ABP Ideas Of India 3.0: ஏபிபி நெட்வர்க்கின் "ஐடியாஸ் ஆஃப் இந்தியா" நிகழ்ச்சி, அரசியல் , திரைத்துறை மற்றும் அறிவியல் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த நபர்கள் பங்கேற்று விவாதிக்க உள்ளனர்.
ஏபிபி-யின் "ஐடியாஸ் ஆஃப் இந்தியா" :
ஏபிபி நெட்வொர்க்கின் முதன்மை நிகழ்வான ”ஐடியாஸ் ஆஃப் இந்தியா” உச்சிமாநாட்டின் மூன்றாவது எடிஷன் மும்பையில் இன்று தொடங்கியுள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாபெரும் நிகழ்வில் சமூகத்தில் முத்திரைப் பதித்த தொழில் அதிபர்கள், கலை, எழுத்துத்துறைகளின் பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் என பல்வேறு துறைகளைச் சார்ந்த பிரபலங்கள் பங்கேற்று, பல்வேறு தலைப்புகளின் கீழ் விவாதிக்க உள்ளனர்.
”மக்களின் எதிர்பார்ப்புகளுக்கான நிகழ்வு”
குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசிய ஏபிபி நெட்வர்க் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரியான அவினாஷ் பாண்டே, “ பெரும் மாற்றங்கள் நிகழ உள்ள ஒரு ஆண்டில் 'ஐடியாஸ் ஆஃப் இந்தியா' நிகழ்வை மீண்டும் கொண்டு வந்துள்ளோம். ஜனநாயகத்தின் மதிப்புகளை நிலைநிறுத்த உலகம் முழுவதும் அறுபது தேர்தல்கள் நடைபெறுகின்றன. ஏபிபி நெட்வொர்க்கின் 'ஐடியாஸ் ஆஃப் இந்தியா' மக்களின் எதிர்பார்ப்புகளில் கவனம் செலுத்துகிறது” என தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் - அதிதேப் சர்கார்:
இவரை அடுத்து பேசிய ஏபிபி நெட்வர்க்கின் தலைமை செய்தி ஆசிரியர் அதிதேப் சர்கார், “அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவின் போது ஆன்மீகம் மற்றும் கருப்பொருள்களின் இணைவு உச்சத்தை எட்டியது. ராமர் 'பாரதத்தின் அடித்தளம்' என்று பிரதமர் கூறினார். விவான் மர்வா மில்லினியல்ஸ் புத்தகம், 2019 இல் நரேந்திர மோடியின் அமோக வெற்றியில் முக்கிய பங்கு வகித்துள்ளது. போதிய வேலை உருவாக்கம் இல்லாததால் பெரும்பாலானவர்களுக்கு பொருளாதார பாதுகாப்பு இல்லை. ஆனால் டெல்லியில் உள்ள பழைய உயரடுக்குகளால் மக்கள் சோர்வடைந்துள்ளனர். அவர்கள் தைரியமான தீர்க்கமான தலைமையை கோருகின்றனர். இளம் வாக்காளர்கள் அடையாளம் காணும் தலைவர், அதிக வேலை வாய்ப்புகளை மனிதாபிமானத்துடன் எவ்வாறு உருவாக்குவது என்பதை வெளிப்படுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
”2047ல் வளர்ச்சியடைந்த இந்தியா”
மஹிந்திரா குரூப்பின் தலைமை செயல் அதிகாரியான அனிஷ் ஷா பேசுகையில், “இந்தியாவிற்கான எனது ஆலோசனை அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியாகும். பொருளாதார வளர்ச்சியானது சமூகத்திற்கு நல்லது செய்வதோடு சமநிலையில் இருக்க வேண்டும். வளர்ச்சி அனைத்துப் பிரிவுகளிலும் பகிரப்பட வேண்டும். பிரதமர் மோடியின் வளர்ச்சியடைந்த பாரத் பார்வை தைரியமானது. அதன்படி, 2047 ஆம் ஆண்டிற்குள் இந்தியா 30 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்ட வேண்டும். அதாவது 23 ஆண்டுகளில் உற்பத்தி 16 மடங்கு வளர வேண்டும். ஏற்றுமதி 11 மடங்கு வளர வேண்டும். பட்ஜெட் அரசியலை விட பொருளாதாரத்திற்கு முன்னுரிமை அளித்ததை நாங்கள் பார்த்தோம். இது மூலதன செலவினங்களுக்கு அதிக முதலீடு மற்றும் நிதி ஒழுங்குமுறைக்கான பல வழிமுறைகள் மூலம் நீண்ட கால வளர்ச்சியை அமைத்து வருகிறது. உள்ளூர் உற்பத்தி, பெண்கள் தலைமையிலான வளர்ச்சி, பண்ணை செழிப்பு மற்றும் அடுத்த தலைமுறைக்கான நிலைத்தன்மை ஆகியவை நீண்ட கால வளர்ச்சிக்கு முக்கியமானவை” என பேசியுள்ளார்.
அடுத்து நடைபெற உள்ள விவாதங்கள்:
சுயெல்லா பிரேவர்மேன், எம்.பி., சசி தரூர், இந்திய - அமெரிக்க எழுத்தாளர் பத்மா லக்ஷ்மி, சிற்ப கலைஞர் சுபோத் குப்தா, சப்யசாசி நிறுவனர் சப்யசாசி, அரசியல் திறனாய்வாளர் பேராசிரியர் சுனில் கில்னானி, நடிகை கரீனா கபூர் கான், நிதி ஆணையத்தின் தலைவர் அரவிந்த் பனகாரியா ஆகியோர் வெவ்வேறு தலைப்புகளில் விவாதிக்க உள்ளனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -