Ideas Of India 3.0: ஏபிபி நெட்வர்க்கின் “ஐடியாஸ் ஆஃப் இந்தியா” நிகழ்ச்சியில் பேசிய ஏபிபியின் சீஃப் எடிட்டர் அதிதேப் சர்கார், இளைஞர்கள் அடையாளம் காணும் தலைவர் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் வலியுறுத்தியுள்ளார்.
ஏபிபி-யின் ”ஐடியாஸ் ஆஃப் இந்தியா” :
ஏபிபி நெட்வர்க்கின் வருடாந்திர நிகழ்வான 'ஐடியாஸ் ஆஃப் இந்தியா' உச்சிமாநாட்டின் மூன்றாவது எடிஷன்மும்பையில் இன்று தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வை ஏபிபி குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி அவினாஷ் பாண்டே, சீஃப் எடிட்டர் அதிதேப் சர்கார் மற்றும் ஏபிபி பிரைவேட் லிமிடெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி துருபா முகர்ஜி ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர். பின்பு, சிஇஒ அவினாஷ் பாண்டேவை தொடர்ந்து, ஏபிபியின் சீஃப் எடிட்டர் அதிதேப் சர்கார் உரையாற்றினார்.
இந்துத்துவா என்றால்...
நிகழ்ச்சியில் பேசிய அவர், “ இந்த நிகழ்வின் தலைப்பே ஒரு போட்டியை ஒப்புக்கொள்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்தபோது ஜனநாயகம், பன்மைத்துவம் மற்றும் வளர்ச்சி ஆகியவை இந்திய அரசின் அடித்தளம் என, சுனில் கில்னானி தெரிவித்தார். பேராசிரியர் கில்னானி தவறு செய்யவில்லை. ஆனால் நேருவின் இந்தியா பற்றிய எண்ணம் இன்னொருவரால் அசைக்கப்பட்டது. அயோத்தியில் ராமர் கோயில் எழுப்பப்படும்போது, இந்தியா இந்து நாடாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி நிற்கிறது.
”மில்லினியல் தலைமுறையின் தாக்கம்”
ஜனவரி மாதம் நடைபெற்ற ராமர் கோயில் திறப்பு விழாவின் போது, ஆன்மீகம், நிலையற்ற பொருள், மதம் மற்றும் அரசாங்கத்தின் இணைவு அதன் உச்சக்கட்டத்தை அடைந்தது. அப்போது பிரதமர் மோடி பேசுகையில், ” ராமர் பாரதத்தின் நம்பிக்கை, ராமர் பாரதத்தின் அடித்தளம், ராமர் பாரதத்தின் சிந்தனை மற்றும் ராமர் பாரதத்தின் அரசியலமைப்பு” என கூறினார்.
இன்று, இது இந்திய அரசியலில் முக்கிய நீரோட்டத்தை பிரதிபலிக்கிறது. ”பல மில்லினியல்கள் (1980ன் தொடக்கத்தில் இருந்து 1990-களின் இறுதி வர பிறந்தவர்கள்) அனுதாபம் கொண்டுள்ளனர். 1981மற்றும் 1996 க்கு இடையில் பிறந்த தலைமுறையினர், 2019ல் மோடியின் அமோகமான வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தனர். மேலும் நாட்டின் அரசியலில் பாஜகவை உடைக்க முடியாத பிடியில் இருந்தது" என்று விவான் மர்வாஹா எழுதியுள்ளார்.
யாருக்கு வாக்களிக்கின்றனர்?
போதிய வேலை வாய்ப்பு உருவாக்கம் இல்லாததால் பெரும்பாலானவர்களுக்கு பொருளாதார பாதுகாப்பு இல்லை. இதனால் அவர்கள் டெல்லியில் உள்ள பழைய உயரடுக்கினரால் சோர்வடைந்துள்ளனர். அதோடு "தங்களைப் போல் பேசும், பார்க்கும் மற்றும் பிரார்த்தனை செய்யும்" மக்களுக்கு வாக்களிக்கின்றனர். அவர்கள் தைரியமான, தீர்க்கமான தலைமையை கோருகிறார்கள்.
1997 மற்றும் 2010 க்கு இடையில் பிறந்த தலைமுறையினர் கொஞ்சம் வித்தியாசமாக சிந்திக்கிறார்கள் என, ஆராய்ச்சியாளர்கள் ஃபெரில் பாடியானி மற்றும் ஹரிஷ் கிருஷ்ணா தெரிவிக்கின்றனர். சமூக ஊடகங்களுக்கு மத்தியில் வளர்ந்து வரும் ஜென் Z, தங்கள் பெற்றோரை மீறி தங்கள் நண்பர்களின் பேச்சைக் கேட்கும் வாய்ப்பு அதிகம். பெரிய நகரங்களுக்கு அப்பால் இருப்பவர்கள், இன்னும் தங்கள் தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கையில் பாதுகாப்பாக வாழ்கின்றனர். ஆனால் அவர்கள் தங்கள் பொழுதுபோக்கின் மூலம் தங்களை மிகவும் சுதந்திரமாக வெளிப்படுத்துகிறார்கள்.
”இளைஞர்கள் அடையாளப்படுத்தும் தலைவர்”
இந்தியாவின் மற்றொரு யோசனையானது பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றம், சுற்றுச்சூழலுக்கான அக்கறை, பன்மைத்துவம் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகியவற்றை இணைக்க முடியும் என்பதாகும். இது தேசிய ஒற்றுமைக்கும் தனிமனிதனின் கண்ணியத்துக்கும் இடையிலான அரசியலமைப்புச் சமநிலையை மீட்டெடுக்க வேண்டும். மனிதாபிமானத்துடன் அதிக வேலை வாய்ப்புகளை எவ்வாறு உருவாக்க முடியும் என்பதை வெளிக்காட்ட வேண்டும். இந்த அம்சங்கள் இளம் வாக்காளர்கள் அடையாளம் காணும் ஒரு தலைவரால் வெளிப்படுத்தப்பட வேண்டும்” என எபிபி சீஃப் எடிட்டர் அதிதேப் சர்கார் தெரிவித்துள்ளார்.