கொரோனா சிகிச்சை முறையில் இருந்து நீண்ட மாதங்களாக பயன்படுத்தப்பட்டு வந்த பிளாஸ்மா தெரஃபி முறை நீக்கப்படுவதாக ஐசிஎம் ஆர் அறிவித்துள்ளது. பிளாஸ்மா முறை பெரிய அளவில் கொரோனாவை குணமாக்க உதவாததே இம்முடிவுக்கு காரணம் என தெரிகிறது.
இது தொடர்பாக நடந்த கூட்டத்தில் பிளாஸ்மா சிகிச்சையில் உள்ள குறைபாடுகளையும் மாறிவரும் வைரஸின் வீரியத்துக்கு ஏற்ப சிகிச்சை முறை செயல்படும் விதத்தையும் ஒப்பிட்டு பார்த்ததில் போதுமான முடிவுகள் கிடைக்கவில்லை என தெரிகிறது. அதிகப்படியான உறுப்பினர்கள் இம்முறையை கைவிடலாம் எனவும் ஆதரவு தெரிவித்ததை அடுத்து இதுபோன்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது
பிளாஸ்மா தெரபி என்பது கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு, முழுமையாக குணமடைந்த ஒருவரின் ரத்தத்தை எடுப்பார்கள். அந்த ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவில் கொரோனாவுக்கு எதிரான ஆன்டிபாடிகள் அதாவது நோய் எதிர்ப்பு அணுக்கள் இருக்கும். அவற்றைப் பிரித்தெடுத்து, நோய் பாதித்துள்ளவர்களின் உடலில் செலுத்தும்போது, அந்த ஆன்டிபாடிகள் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் உள்ள கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடி மேற்கொண்டு வைரஸை பெருகவிடாமல் கட்டுப்படுத்தும். இவ்வாறு செய்யப்பட்டும் சிகிச்சை முறைக்கு பிளாஸ்மா தெரபி என்று பெயர்.