Prestigious EXCELL Award; குடும்பக் கட்டுப்பாடு திட்டங்களை மிகவும் சிறப்பாக செயல்படுத்திய காரணத்தால் இந்தியாவுக்கு சர்வதேச அளவில் விருது வழங்கப்பட்டுள்ளது.
குடும்ப கட்டுப்பாடு திட்டத்தில் நவீன முறையை அமல்படுத்தியதற்காக இந்தியாவுக்கு சர்வதேச விருது கிடைத்துள்ளது. ஐ.சி.எஃப்.பி., எனப்படும் சர்வதேச கூட்டமைப்பின் மாநாடு தாய்லாந்தில் நடந்தது. இதில் குடும்ப கட்டுப்பாடு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய நாடுகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
இந்த திட்டத்தில் மற்ற நாடுகளுக்கு முன்னோடியாக செயல்படும் நாடாக இந்தியா உள்ளது என இந்தியாவுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. நவீன கருத்தடை முறைகளை அமல்படுத்தி செயல்பட்டதற்காக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பிரிவில் விருது பெரும் ஒரே நாடு இந்தியாதான். மேலும், இந்தியாவுக்கு இந்த விருது கொடுக்கப்பட்டுள்ளது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்யா கூறுகையில், ”குடும்பக் கட்டுப்பாடு குறித்து மத்திய பாரதிய ஜனதா ஆட்சியின் சிறப்பான செயல்பாடுகளால் இந்தியாவுக்கு இந்த விருது கிடைத்துள்ளது” என்றார்.
ஐ.நாவின் அதிர்ச்சி அளிக்கும் ரிப்போர்ட்
ஒரு புறம் இந்தியாவுக்கு இப்படியான விருதுகள் கிடைக்கும் போது அனைவரும் பாராட்டிக் கொண்டு இருக்க, ஐ.நா சபை தரப்பில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் அதிர்ச்சி அளிக்கும் புள்ளி விபரங்கள் இருக்கின்றன. அது என்னவென்றால்,
சீனாவின் மக்கள்தொகை அடுத்த ஆண்டு முதல் குறையத் தொடங்கும் என்றும் இந்தியா உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக மாறும் என்றும் எதிர்ப்பார்ப்பதாக அறிவித்து இந்தியர்களுக்கு ஐநா அதிர்ச்சியூட்டியுள்ளது.
2021ஆம் ஆண்டின்படி சீனாவின் கருவுறுதல் விகிதம் 1.16. கொரோனா தொற்றுப் பரவல் சீனாவைச் சேர்ந்த பலரது குழந்தை பெற்றுக்கொள்ளும் விருப்பத்தின் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், சீனாவில் பிறப்பு விகிதம் இந்த ஆண்டு மிகவும் வீழ்ச்சியடையும் என்றும் மக்கள்தொகை ஆய்வாளர்கள் முன்னதாகத் தெரிவித்துள்ளனர்.
அந்நாட்டில் ஏற்கெனவே பிறப்பு விகிதமானது 10.6 மில்லியனில் இருந்து 10 மில்லியனுக்கும் கீழே குறைந்துள்ளதாகவும், 2020ஆம் ஆண்டை விட 11.5 விழுக்காடு பிறப்பு விகிதம் குறைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக சீன தலைநகர் பெய்ஜிங்கில் கடந்த ஆண்டு தம்பதிகள் மூன்று குழந்தைகளைப் பெற அனுமதி வழங்கப்பட்டது. பிறப்பு விகித அளவை சீராக்க இவ்வாறு அறிவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
வரும் காலத்தில் 2050ஆம் ஆண்டுவாக்கில் உலகின் மக்கள்தொகையில் பாதிக்கு மேல், இந்தியா, பாகிஸ்தான், தான்சானியா, எகிப்து, எத்தியோப்பியா, காங்கோ, பிலிப்பைன்ஸ், நைஜீரியா ஆகிய 8 நாடுகளில் தான் அடங்கியிருக்கும் என்றும் ஐ.நா. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க,