தமிழ்நாடு:
- பொங்கல் பண்டிகிக்கு வழங்குவதற்காக புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி - சேலை; அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை
- வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழந்த காற்றழுத்த மண்டலமாக மாறும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
- 92 பதவிக்கு குரூப் 1 முதல்நிலை தேர்வு; தமிழகம் முழுவதும் 1.91 லட்சம் பேர் எழுதிய நிலையில் 1.31 லட்சம் பேர் ஆப்செண்ட்
- கால்பந்து வீராங்கனை ப்ரியாவின் மரணத்துக்கு காரணமான இரண்டு மருத்துவர்களை பிடிக்க மூன்று தனிப்படை அமைத்து காவல் துறை தேடி வருகின்றனர்.
- தமிழகத்தில் பல மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்த மிக கனமழை எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது.
- காங்கிரஸ் கோஷ்டி மோதலில் திடீர் திருப்பம்; கே.எஸ்.அழகிரிக்கு எதிராக மூத்த தலைவர்கள் போர்க்கொடி
- மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலையான ஜெயக்குமார், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- தமிழ்நாட்டின் முன்னாள் வனத்துறை அமைச்சரும், அ.தி.மு.க.வின் தற்போதைய பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசன் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
இந்தியா:
- 130 கோடி இந்தியர்களின் பொறுப்பு; தமிழின் பாரம்பரியத்தை காப்போம் - காசி தமிழ் சங்கமம் விழாவில் பிரதமர் மோடி பேச்சு
- தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு எதிரொலி; சென்னையில் 4 வீடுகளில் என்.ஐ.ஏ மீண்டும் சோதனை
- கேரளாவில் மாடல் அழகி ஜீப்பில் கூட்டு பாலியல் வன்கொடுமை; மற்றொரு அழகி உட்பட 4 பேர் கைது
- டெல்லி அமைச்சருக்கு திகார் சிறையில் மசாஜ்; சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்
- இந்தியாவின் முதல் ஆண் பெண்ணியவாதி அம்பேத்கர் - காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் புகழாரம்
- ஓய்வு பெற்ற ஐ.ஏ.எல். அதிகாரியான அருண் கோயல் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் சபரிமலை ஐயப்ப பக்தர்களுடன் சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
- ஜம்மு காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகம்:
- இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் நேற்றிரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவானது.
- Zomato நிறுவனம் தனது மொத்த தொழிலாளர்களில் குறைந்தபட்சம் 4% குறைக்க திட்டமிட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
- ரஷ்யாவில் நேற்று 5 அடுக்கு மாடி ஒன்றில் நடந்த கேஸ் கசிவு விபத்தில் 4 குழந்தைகள் உள்பட 9 பேர் பலியாகினர்.
- சீன தலைநகர் பீஜிங் நகரில் மீண்டும் கொரோனா பரவல்: மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை
- சீனாவில் ஒரே நாளில் 24 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
விளையாட்டு:
- ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர்; கத்தாரில் இன்று கோலாகல தொடக்கம் - பட்டம் வெல்ல 32 அணிகள் பலப்பரீட்சை
- இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது போட்டி இன்று நடைபெறுகிறது.
- இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற ஆஸ்திரேலியா, ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.