பிரதமர் நரேந்திர மோடியின் பஞ்சாப் பயணம் பாதியில் ரத்து செய்யப்பட்ட விவகாரம் தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  இதற்கு பலர் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.


அந்தவகையில், பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த விவகாரம் குறித்து, “ தனது சொந்த பிரதமரின் பாதுகாப்பில் சமரசம் செய்யப்பட்டால், தன்னை பாதுகாப்பாக இருப்பதாக எந்த நாடும் கூறிக்கொள்ள முடியாது.  பிரதமர் மோடி மீது அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை நான் கண்டிக்கிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.




இதற்கு நடிகர் சித்தார்த் பாலியல் ரீதியான சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்து ட்வீட் செய்திருந்தார். அவரது ட்வீட்டுக்கு பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.






சித்தார்த் இந்த விவகாரம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “தவறான உள்நோக்கத்துடன் அது சொல்லப்படவில்லை. எனது பதில் தவறாக புரிந்துகொள்ளப்பட்டது” என பதிவிட்டுள்ளார். இதற்கிடையே அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென தேசிய மகளிர் ஆணையமும் வலியுறுத்தியிருந்தது.






இந்நிலையில் சாய்நா நேவால் இதுகுறித்து பேசுகையில், “அவர் எதை அர்த்தப்படுத்தி அப்படி பேசினார் என்று எனக்குத் தெரியவில்லை. அவரை ஒரு நடிகராக எனக்கு பிடிக்கும். ஆனால் இது நன்றாக இல்லை. அவர் சிறந்த வார்த்தைகளால் தன்னை வெளிப்படுத்தியிருக்கலாம்” என்றார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண