மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் ஆஷிஷ் யெச்சூரி கொரோனா காரணமாக சிகிச்சைபெற்று வந்த நிலையில் இன்று காலை 5.30 மணியளவில் காலமானார். இந்நிலையில் அவரது தந்தை சீதாராம் யெச்சூரி தற்போது வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "இன்று நண்பகலில் எனது மகன் ஆஷிஷுக்கு நான் விடைகொடுக்கிறேன். இந்நேரத்தில் எங்கள் சோகத்தை பகிர்ந்துகொள்ளும் உங்கள் அனைவரும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன். இந்த கடினமான நேரத்தை நாங்கள் எதிர்கொள்ள எங்களுக்கு வலிமையை கொடுப்பதற்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எண்ணற்ற உயிர்களை இந்த தொற்றுநோய் பலிவாங்கிவரும் இந்த நேரத்தில் நான் தனியாக இல்லை என்பதை நான் உணர்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.  






ஆஷிஷ் யெச்சூரி டெல்லியில் உள்ள பிரபலமான பத்திரிக்கை நிறுவனத்தில் நல்ல பொறுப்பில் வேலைபார்த்து வந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜூன் மாதம் 9-ஆம் தேதி தனது 35-வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் ஆஷிஷ் யெச்சூரி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி டெல்லிக்கு அருகில் குர்கானின் உள்ள மெடந்தா என்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நுரையீரலில் தொற்று பரவிய நிலையில் 10 நாள் சிகிச்சைக்கு பிறகு இன்று காலை 5.30 மணியளவில் அவர் மரணமடைந்தார்.