அர்மான் மாலிக் எனும் யூடூபர் தனது இரண்டு மனைவியும் ஒரே நேரத்தில் கர்ப்பமாக இருப்பதாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இது, தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகிவருகிறது.
அர்மான் மாலிக் எனும் யூடூபர் ஹைதராபாத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் தனது யூடூப் சேனலில் பல்வேறு வகையான வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அதேபோல் தனது அன்றாட வாழ்வியல் நிகழ்வுகளை தனது சமூகவலைதளப்பக்கத்திலும், பதிவிட்டு வருகிறார். இதனாலேயே அவருடைய சமூக வலைதளப்பக்கமான இன்ஸ்டாகிராமில் அவரை பின் தொடருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
அண்மையில் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள தகவல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதில் அவர் தன்னுடைய இரண்டு மனைவிகளும் கர்ப்பமாக இருப்பதாக பதிவிட்டுள்ளார். இந்த பதிவில், அர்மான் மாலிக், அவருடைய மகன் மற்றும் இரண்டு மனைவிகளுடன் உள்ள புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார்.
இவருடைய இந்த பதிவுக்கு இவரை பின் தொடருபவர்களில் பலர் ஜாலியாக கமெண்ட் செய்தும், பலர் அவரைத் திட்டுயும் கமெண்ட் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதில், ஒருவர், ”உன்னால் மட்டும் தான் இதனைச் செய்ய முடியும்” என கமெண்ட் செய்துள்ளார்.
அர்மான் மாலிக், கடந்த 2011ஆம் ஆண்டு பயல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதன் பின்னர், 2018ல் கிருத்திக் என்ற மற்றொரு பெண்ணையும் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த கிருத்திக் என்பவர் அர்மான் மாலிக்கின் முதல் மனைவியான பயலின் தோழி என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, அர்மான் மாலிக் ஹைதராபாத்தில் தனது இரு மனைவிகளுடன் வசித்து வருகிறார். இருவரும் ஒரே நேரத்தில் கர்ப்பமாக இருக்கின்றனர். அர்மான் தன்னுடைய இன்ஸ்டாவில் கர்ப்பமாக இருக்கும் இரு மனைவிகள் மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படத்தினை பகிர்ந்து “ எனது குடும்பம் “ என கேப்சனிட்டுள்ளார்.
இவரது இந்த பதிவுக்கு 1 லட்சத்து 60 ஆயிரம் லைக்குகளை அவரது ஃபாளோவர்கள் அளித்துள்ளனர்.