தெலுங்கானா ஹைதராபாத்தில் பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. சதுதீன் மாலிக் மற்றும் 2 சிறுவர்களை கைது செய்த நிலையில் மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
கடந்த மே 28 ம் தேதியன்று ஹைதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் ஒரு பார்ட்டி முடிந்து வீடு திரும்பும் போது 17 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக சிறுமியின் தந்தை போலீசில் புகார் அளித்ததை அடுத்து இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது. சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில், 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 354 மற்றும் 323 மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் 10 வது பிரிவு 9 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, ஆளும் டிஆர்எஸ் செயல் தலைவரும் தெலுங்கானா அமைச்சருமான கே.டி.ராமராவ், ஹைதராபாத்தில் இளம்பெண்ணைக் கூட்டுப் பலாத்காரம் செய்த வழக்கில் "உடனடி மற்றும் கடுமையான நடவடிக்கை" எடுக்குமாறு மாநில உள்துறை அமைச்சர், காவல்துறை இயக்குநர் (டிஜிபி) மற்றும் ஹைதராபாத் நகர காவல் ஆணையர் ஆகியோருக்கு வெள்ளிக்கிழமை கோரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அடையாளம் காணப்பட்ட ஐந்து குற்றவாளிகளில், மூன்று பேர் மைனர்கள். ஒரு குற்றவாளி சதுதீன் மாலிக் நேற்று கைது செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து இன்று வன்கொடுமை செய்த மேலும் 2 சிறுவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாகியுள்ள மேலும் 2 பேரையும் தேடி வருகின்றனர்.
போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் பப்பிற்கு வெளியே நின்றுள்ளனர். அப்பொழுது அங்கிருந்த சிறுவர்கள் வீட்டிற்கு அழைத்து செல்வதாகக் கூறி அந்த பெண்ணை காருக்குள் அடைத்துள்ளனர். தொடர்ந்து அந்த பெண்ணிடம் குற்றம் சாட்டப்பட்ட 5 பேரும் மாறி மாறி வன்கொடுமை செய்துள்ளனர். ஒருவர் காருக்குள் அந்த பெண்ணிடம் அத்துமீறும்போது மற்றவர்கள் காருக்கு வெளியே காவலுக்கு நின்றுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்