சமூக வலைதளங்களில் சில உணவு தொடர்பான ஓட்டல்கள் மற்றும் கடைகள் வீடியோ வைரலாவது வழக்கம். அவை பெரிதும் பல உணவு ரிவ்யூ செய்யும் நபர்களால் வைரலாகும். ஆனால் தற்போது வைரலாகும் வீடியோவிற்கு காரணம் அந்தக் கடைக்காரரின் சிறு வயது மகன் தான். அவர் தன்னுடைய தந்தை கடை தொடர்பாக போட்ட வீடியோ ஒன்று வேகமாக வைரலாகி வருகிறது. 


ஹைதராபாத் பகுதியில் பாபா கி ஹாலிம் என்ற கடை ஒன்றை ஒருவர் நடத்தி வருகிரார். இவருடைய மகன் முகமது அடினான் தன்னுடைய கடைக்கு ஆட்கள் வருவதில்லை என்பதற்காக ஒரு யோசனையை செய்துள்ளார். அதன்படி அவர் பாபா கி ஹலிம் என்ற பெயரில் ஒரு இன்ஸ்டாகிராம்பக்கம்  மற்றும் யூடியூப் செனல் ஆகியவற்றை தொடங்கியுள்ளார். அந்தப் பக்கத்தில் தன்னுடைய தந்தையின் கடை தொடர்பான விவரங்களை எடுத்து ஒரு வீடியோவாக பதிவிட்டுள்ளார். அவர் ஒரு உணவு ரிவ்யூ செய்யும் நபரை போல் இந்தக் கடை தொடர்பான தகவல்களை தெரிவித்துள்ளார். தன்னுடைய மழலை குறளில் அவர் கூறுவது மிகவும் அழகாக அமைந்துள்ளது. 


 






இவருடைய வீடியோவை பார்த்த பல உணவு ரிவ்யூ செய்யும் நபர்கள் இந்தச் சிறுவனின் தந்தை கடைக்கு வந்துள்ளனர். மேலும் அவர்களும் அங்கு சாப்பிட்டு சில ரிவ்யூ வீடியோக்களை பதிவிட்டுள்ளனர். இதன்காரணமாக முகமது அடினானின் தந்தை கடைக்கு பலரும் வந்துள்ளனர். தற்போது அவருடைய தந்தையின் கடை பலரிடம் பிரபலம் அடைந்துள்ளது. அந்தக் கடைக்கு வரும் பலரும் சிறுவன் அடினானை பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண