ஹைதாராபாத்தில் கெட்டுப்போன மைசூர் பாக்கை வாடிக்கையாளருக்கு விற்பனை செய்த பிரபல பேக்கிரிக்கு 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 


ஹைதாராபாத்தின் கஜாகுடா பகுதியில் அமைந்துள்ள பிரபல கராட்ஷி பேக்கரியில் வாடிக்கையாளர் ஒருவர் கடந்த சனிக்கிழமை மைசூர் பாக்கை வாங்கியுள்ளார். அதனை திறந்து பார்த்த போது மைசூர்பாக் கெட்டு போனதோடு, அதில் பூஞ்சை வளர்ந்திருப்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து அதனைப் புகைப்படம் எடுத்த அவர் அந்தப் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ஹைதாராபாத் மாநாகராட்சி அதிகாரி, அமைச்சர் உள்ளிட்டோரை டேக் செய்திருந்தார். 


 






இதனை கவனித்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பேக்கரியை ஆய்வு செய்தனர். அப்போது அங்கு கிருமி நாசினியின்மை, முறையற்ற கழிவு நீர் அமைப்பு, கொரோனா விதிமுறைகள் முறையாக பின்பற்றப் படாமல் இருந்தது உள்ளிட்டவை தெரியவந்தது. இதனையடுத்து அந்த கடைக்கு அதிகாரிகள் அபராதமாக 10,000 ரூபாய் விதித்தனர். 


இது தொடர்பாக சமந்தப்பட்ட விளக்கமளித்த பேக்கரி நிறுவனம், எப்படி தவறு நடந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. வரும் காலத்தில் இது போன்ற தவறுகள் நடக்காமல் இருப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளது.


68 வருடம் பாராம்பரியம் கொண்ட கராட்ஷி பேக்கரி நிறுவனம் ஹைதராபாத்தின் முக்கியமான பேக்கரிகளில் ஒன்று. இந்த நிறுவனத்திற்கு இந்தியா முழுவதும் கிளைகள் உள்ளன. கடந்த 2017 ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தை சேர்ந்த கிளை ஒன்றில் இருந்து வாங்கப்பட்ட ரொட்டிதுண்டு பாக்கெட்டில், அதன் தயாரிக்கப்பட்ட தேதி தவறாக குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அது தொடர்பாக விளக்கமளித்த நிறுவனம் எழுத்து பிழையால் இது போன்ற தவறு நடந்து விட்டது என்றது. அதனைத் தொடர்ந்து ஆய்வு செய்த அதிகாரிகளும் எந்த வித விதிமீறல்களும் கண்டறியப்படவில்லை என்று கூறினர். 


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்