ஹைதரபாத்தில் இன்ஸ்பெக்டர் பெண் ஒருவரை துப்பாக்கி முனையில் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கி, அப்பெண்ணையும் அவரது கணவரையும் கடத்தியுள்ளார். கடத்திய இன்ஸ்பெக்டரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலம், செகந்திராபாத்தில் போலீஸ் அதிகாரி நாகேஸ்வர ராவ் மீது, தனது பண்ணை வீட்டில் ஊழியரின் மனைவியைக் கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாரேட்பல்லி காவல் நிலையத்தின் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் எஸ்.எச்.ஓ நாகேஷ்வர் ராவ் மீது பெண் ஒருவர் கொடுத்த புகாரில், தனது வீட்டுக்குள் புகுந்து, தன்னை பாலியல் வன்கொடுமை செய்து, தனது கணவரைத் தாக்கி, ரிவால்வரைக் காட்டி மிரட்டி, ஜூலை 7-ஆம் தேதி இரவு அவர்களைக் கடத்திச் சென்றதாக அந்தப் பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இன்ஸ்பெக்டர் மீது வன்கொடுமை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதில் இருந்து இன்ஸ்பெக்டர் தலைமறைவாகி விட்டார். இதனால் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சஸ்பெண்ட் செய்யப்பட்ட நாகேஸ்வர ராவை கைது செய்ய போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டு, தலைமறவாக உள்ள இன்ஸ்பெக்டர் நாகேஷ்வர் ராவ் 2018 ஆம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்ட ஒருவரைக் கைது செய்ததாகவும், பின்னர் அவரை தனது பண்ணை வீட்டில் மாதாந்திர ஊதியம் பெறும் ஊழியராக நியமித்ததாகவும் காவல்துறையில் பெண் கொடுத்த புகாரில் தெரிவித்துள்ளதுள்ளார். தனது கணவர் இன்ஸ்பெக்டர் நாகேஷ்வர் ராவின் பண்ணை வீட்டில் பணிபுரியும் போது, கணவருக்குத் தெரியாமல் தன்னை இன்ஸ்பெக்டரின் விவசாய நிலத்துக்கு வலுக்கட்டாயமாக அழைத்து வந்து பாலியல் வல்லுறவுக்கும் ஆட்படுத்தி வந்துள்ளார். பின்னர், இதை அந்த பெண் தனது கணவரிடம் கூறியபோது, அவரது கணவர், இன்ஸ்பெக்டரை அழைத்து தனது குடும்பத்தை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் இது தொடர்ந்து நடந்து வரவே, இன்ஸ்பெக்டரின் மனைவியிடம் அவரது நடத்தை குறித்து தெரிவித்துள்ளார். இதனால் தனது மனைவியிடமும், பாதிக்கப்பட்ட பெண்ணிடமும் இன்ஸ்பெக்டர் மன்னிப்பு கேட்டார்.
பெண்ணின் புகாரில், பெரும் கோபத்தில் இருந்து வந்த நாகேஷ்வர ராவ், ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் சில கான்ஸ்டபிள்களை வீட்டிற்கு வந்து தனது கணவரை அழைத்துச் சென்றதாக கூறியுள்ளார். மேலும், தனது கணவரை போலீசார் தாக்கியதாகவும், பொய் வழக்கு போடுவதாக மிரட்டியதாகவும் அவர் புகார் அளித்துள்ளார். போலீசார் தனது கணவரின் கைகளில் கஞ்சா பொட்டலங்களை திணித்து படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்ததாகவும், அவரது தவறான நடத்தை குறித்து இன்ஸ்பெக்டரின் குடும்ப உறுப்பினர்களிடம் தெரிவிக்க முயன்றால், பொய் வழக்கில் சிக்க வைப்பதாக எங்கள் இருவரையும் மிரட்டியதாகவும் அந்த பெண் தனது புகாரில் கூறியுள்ளார்.
இன்ஸ்பெக்டர் நாகேஷ்வர ராவ் காவல் துறைக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதும், இதனால் காவல் துறை அவரை சஸ்பெண்ட் செய்ததும், பெரும் பேசு பொருளாகியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
கடந்த ஜூலை 8-ஆம் தேதி வனஸ்தலிபுரம் காவல்நிலையத்தில் அந்த நபரின் மனைவி புகார் அளித்ததை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.