ஹைதராபாத்தில் தனியார் நிறுவன உரிமையாளரின் வாட்ஸ்அப் கணக்கு மூலம் 1.95 கோடி ரூபாயை அபேஸ் செய்ய சைபர் குற்றவாளிகள் முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 1.95 கோடி ரூபாயை குறிப்பிட்ட வங்கி கணக்குக்கு அனுப்புமாறு நிர்வாக இயக்குநரின் வாட்ஸ்அப் எண்ணில் இருந்து கணக்கு அதிகாரிக்கு சைபர் குற்றவாளிகள் மெசேஜ் செய்துள்ளனர். புதிய திட்டத்திற்கான அட்வான்ஸ் தொகை என கூறியதால் கணக்கு அதிகாரி 1.95 கோடி ரூபாயை அனுப்பியுள்ளார். ஆனால், இறுதியில், இந்த செயலில் ஈடுபட்டது சைபர் குற்றவாளிகள் என தெரிய வந்தது.


பாஸிடம் இருந்து வந்த வாட்ஸ்அப் மெசேஜ்:


நவீன தொழில்நுட்பம் உலகை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளது. குறிப்பாக, இணையத்தால் உலக நாடுகள் பெரிய அளவில் முன்னேற்றம் கண்டபோதிலும் சைபர் குற்றங்கள் உலகுக்கு மிகப்பெரும் சவாலாக மாறியுள்ளது. சமீப காலமாகவே, சைபர் மோசடிகள் அதிகரித்து வருகிறது. அப்பாவி மக்களை மோசடி கும்பல் பல்வேறு விதமாக ஏமாற்றுவது தொடர் கதையாகி வருகிறது.


இந்த நிலையில், ஹைதராபாத்தை சேர்ந்த தனியார் நிறுவன நிர்வாக இயக்குநர் போல் வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பி கிட்டத்தட்ட 1.95 கோடி ரூபாயை ஏமாற்ற முயற்சித்துள்ளனர் சைபர் குற்றவாளிகள். புதிய திட்டத்திற்கான அட்வான்ஸ் தொகை எனக் கூறி, 1.95 கோடி ரூபாயை குறிப்பிட்ட வங்கி கணக்குக்கு அனுப்புமாறு நிர்வாக இயக்குநரின் வாட்ஸ்அப் எண்ணில் இருந்து நிறுவனத்தின் கணக்கு அதிகாரிக்கு சைபர் குற்றவாளிகள் மெசேஜ் செய்துள்ளனர்.


1.95 கோடி ரூபாயை மீட்டது எப்படி?


நிர்வாக இயக்குநரின் போட்டோ இருந்ததால் அந்த வங்கி கணக்கிற்கு அந்த பணத்தை அனுப்பியுள்ளார் கணக்கு அதிகாரி. வங்கி கணக்கில் இருந்து பணம் அனுப்பப்பட்டது தொடர்பாக நிர்வாக இயக்குநருக்கு நோட்டிபிகேஷன் வந்துள்ளது. இதனால், பதறிப்போய் கணக்கு அதிகாரியை அவர் தொடர்பு கொண்டுள்ளார்.


நடந்ததை கணக்கு அதிகாரி கூறியுள்ளார். ஆனால், தான் அப்படி மெசேஜ் அனுப்பவில்லை என நிர்வாக இயக்குநர் கூறியுள்ளார். பின்னர், உடனடியாக தேசிய சைபர் குற்றப்பிரிவிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. உடனே அதிரடியில் இறங்கிய சைபர் குற்றப்பிரிவு அதிகாரிகள், பணம் எங்கு சென்றது என்பதை கண்டுபிடித்துள்ளனர்.


நல்வாய்ப்பாக, சைபர் குற்றவாளிகள் அந்த பணத்தை வங்கி கணக்கில் இருந்து எடுக்கவில்லை. இதனால், மொத்த பணமும் மீட்கப்பட்டது.