Human sacrifice: இந்தியாவில் அடுத்தடுத்து நரபலி சம்பவங்கள் அரங்கேறி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


குஜராத் மாநிலம் சோம்நாத் மாவட்டத்தின் தாரா கிர் கிராமத்தில் ஒரு குடும்பம் தங்கள் 14 வயது மகளை நரபலி கொடுத்ததாக  காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக அந்த குடும்பத்திற்கு பணப் பிரச்சினை இருந்த வந்ததாக கூறப்படுகிறது. யாரையாவது நரபலி கொடுத்தால் பணப் பிரச்சினை தீரும் என மூடநம்பிக்கையில் தனது மகளை கொலை செய்துள்ளனர்.


14 வயது சிறுமி நரபலி:


அக்டோபர் 3ஆம் தேதி பணப் பிரச்சினை தீரும் என்ற மூட நம்பிக்கையில் 14 வயது சிறுமியை நரபலி கொடுத்துவிட்டு, அன்று இரவே வீட்டிற்கு அருகே உள்ள பண்ணையில் தனது மகளை அந்து குடும்பம் தகனம் செய்தது. 


இதுகுறித்து காவல்துறை தெரிவித்த தகவலின்படி, ஆறு மாதங்களுக்கு முன்பு வரை, அந்த சிறுமி சூரத்தில் படித்து வந்துள்ளார். பின்னர் பாவேஷ் என்ற சிறுமியை எந்த காரணங்களுமின்றி பெற்றோர் சொந்த ஊருக்கு அழைத்து வந்து பண்ணையில் தங்க வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நீண்ட காலமாக இருந்த வந்த பணப்பிரச்னை தீரும் என்ற நம்பிக்கையில் பெற்றோர் தனது மகளை நரபலி கொடுத்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இது தொடர்பாக கிராம மக்கள் அளித்த புகாரின் பேரின் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கேரளாவில் நரபலி:


இதே போன்று கேரள மாநிலம் கொச்சியில் லாட்டரி விற்று வந்த தருமபுரியை சேர்ந்த பத்மா என்பவரை ஏமாற்றி அழைத்துச் சென்று நரபலி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக திருவல்லா தம்பதிகளான பக்வால் சிங் மற்றும் லைலா , இடைத்தரகராக செயல்பட்ட ஷிஹாப் என்பவரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.


அதிகமான கடன் மற்றும் பணப் பிரச்சினை தீர வேண்டும் என்ற மூட நம்பிக்கையில் இந்த நரபலியை தம்பதியினர் கொடுத்தனர். பணக்காரனாக மாறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என போலி மந்திரவாதியை சந்தித்து பகவால் சிங் பேசியிருந்தார். 2 பெண்களை நரபலி கொடுத்தல் நிறைய பணம் கிடைக்கும் என முகமது ஷபி கூற, அதற்கு பகவால் சிங் சம்மதம் தெரிவித்துள்ளார்.


லாட்டரி விற்பனையில் தனக்கு ஏற்கனவே அறிமுகமாகியிருந்த ரோஸ்லின், பத்மா ஆகியோரை பகவல்சிங் வீட்டிற்கு அழைத்து வந்து தம்பதி மற்றும் அந்த போலி சாமியார் நரபலி கொடுத்தனர். பின்னர் 3 பேரும் சேர்ந்து இருவரின் சடலங்களை 60க்கும் மேற்பட்ட தூண்டுகளாக வெட்டி சாப்பிட்டுள்ளனர். நீண்ட ஆயுள் கிடைக்கும் என கூறி முகமது ஷபி இதை செய்ய வைத்துள்ளார். இதனை தொடர்ந்து மீதமுள்ள தூண்டுகளை வீட்டின் பின்புறம் புதைத்தனர். பண ஆசைக்காக இரு பெண்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் கேரள மாநிலம் முழுவதும் கதிகலங்க வைத்துள்ளது.