ஆந்திராவில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நிர்வாணமாக பெண் ஒருவரிடம் வீடியோ காலில் பேசியதாக எழுந்துள்ள புகார் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.


ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்பி


ஆந்திரப் பிரதேசம், இந்துப்பூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான கோரன்ட்லா மாதவ், பெண் ஒருவரிடம் நிர்வாணமாக வீடியோ காலில் பேசி அவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாகப் புகார் எழுந்துள்ளது. 




முன்னதாக வெளியான வீடியோ ஒன்றில் கோரன்ட்லா மாதவ் பெண் ஒருவருடன் நிர்வாணமாக பேசும் வகையில் அமைந்துள்ள நிலையில், ஜிம்மில் தான் சட்டையின்றி உடற்பயிற்சி செய்யும் வீடியோவை எடுத்து யாரோ மார்ஃபிங் செய்து வெளியிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


மார்ஃபிங் வீடியோ


இந்த வீடியோ அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி கோரண்ட்லா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் சாடி வருகின்றனர். 


இந்நிலையில், இணையத்தில் பரவுவது போலியான வீடியோ என்றும் இது தொடர்பாக போலீசாரில் புகார் அளிக்க உள்ளதாகவும் கோரண்ட்லா மாதவ் தெரிவித்துள்ளார்.


மேலும், ”இந்த சதியின் பின்னணியில் ஒரு செய்தி சேனல் உள்ளது. அவர்கள் மீது அவதூறு வழக்கு தொடரப்போகிறேன். இந்த விவகாரம் தொடர்பாக பிரஸ் கவுன்சில், ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டை அணுக உள்ளேன்.


'சாதியால் காழ்ப்புணர்ச்சி... தலையை துண்டித்துக் கொள்வேன்’


எனது நற்பெயரைக் கெடுக்கவும், என்னை சிக்கலில் மாட்டிவிடவும் இந்த அவதூறு பரப்பப்படுகிறது. இந்த சதியின் பின்னணியில் தெலுங்கு தேசம் கட்சி உள்ளது. அவர்களுக்கு தைரியம் இருந்தால், அவர்கள் என்னை நேரடியாக சந்திக்க வேண்டும். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்.


இது தொடர்பாக எஸ்பி மற்றும் சைபர் கிரைம் காவல் துறையினரிடமும் ஏற்கனவே புகார் அளித்துள்ளேன். இந்த சதியை காவல் துறையினர் விசாரித்து அதன் பின்னணியில் உள்ளவர்களை தண்டிக்க வேண்டும். வீடியோ உண்மையானது என நிரூபிக்கப்பட்டால், நானே என் தலையை துண்டித்துக்கொள்வேன்," எனத் தெரிவித்துள்ளார்.


மேலும், தான் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்பதால் தான் குறிவைக்கப்பட்டதாகவும், தான் கடின உழைப்பால் உயர்ந்து வந்ததாகவும், உயர் சாதியினர் நடத்தும் ஊடகங்கள் வேண்டுமென்றே தன்னை பழிவாங்குவதாகவும் இந்த விவகாரத்தில் தேவைப்பட்டால் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் செல்வேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இந்நிலையில், ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி இச்சம்பவம் குறித்து உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், இது குறித்து விசாரிக்காக அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் ஒய்எஸ்ஆர்சிபி பொதுச் செயலாளரும், அரசு ஆலோசகருமான சஜ்ஜலா ராமகிருஷ்ண ரெட்டி தெரிவித்துள்ளார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண