Fancy Number Plate : 90,000 ரூபாய் ஸ்கூட்டிக்கு, ரூ.1.12 கோடிக்கு பேன்சி நம்பர்  பிளேட் வாங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் அனைவரும் அவர்கள் வாங்கிய கார், இருசக்கர வாகனத்திற்கு பேன்சி நம்பர் பிளேட் வாங்க அதிக ஆர்வம் காட்டுவார்கள். பேன்சி நம்பவர் பிளட்டுக்காக எவ்வளவு பணத்தை வேண்டுமானாலும் செலவு செய்ய தயாராக இருப்பார்கள். தற்போது பேன்சி நம்பர்கள் எல்லாம் ஆன்லைன் மூலம் ஏலத்தில் விடப்படுகின்றன.


ஏலத்தில் விடப்படும் நம்பர்களை விரும்புபவர்கள் அதனை எவ்வளவு பணம் கொடுத்து கூட அந்த நம்பரை வாங்கத் தயாராக இருக்கின்றனர். அப்படிதான் ஹிமாச்சல் பிரதேசத்தில் ஒரு நபர் 1.12 கோடி ரூபாய்க்கு பேன்சி நம்பர் பிளேட் வாங்கியுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. 


ஆயிரத்தில் தொடங்கிய ஏலம்


ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் சம்லா மாவட்டத்தில் உள்ள கோட்கேய் பகுதியில் போக்குவரத்து அலுவலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் உள்ள பேன்சி நம்பர்கள் சமீபத்தில் ஆன்லைனில் ஏலத்தல் விடப்பட்டது. இந்த பேன்சி நம்பர்களுக்கு எல்லாம்  ஆயிர ரூபாயில் இருந்து ஏலம் தொடங்கியது.


இந்த ஏலத்தில் அதிகபட்சமாக (HP 99-999 series) எண் தான் ரூ.1.12 கோடிக்கு  ஏலம் போயுள்ளது. இவ்வளவு அதிக விலைக்கு ஏலம்  போனது அனைவருக்கும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது. இவ்வளவு பணம் கொடுத்து நம்பர் பிளேட் வாங்கியது ஒரு கார் என்றால் கூட பராவாயில்லை. ஆனால் ஒரு 90,000 ரூபாய் ஸ்கூட்டிக்கு ரூ.1.12 கோடி தொகை கொடுத்து நம்பர் பிளேட் வாங்கியது அனைவரையும் வாய் அடைக்க வைத்தது.


அதிக விலைக்கு ஏலம் போன நம்பர் பிளேட்


இதுமட்டுமின்றி பல பேன்சி நம்பர் பிளேட்டுகள் அதிக விலைக்கு ஏலம் போயின. அதன்படி, HP 99-099 என்ற எண் ரூ.21.6 லட்சத்திற்கும், HP 990005 என்ற எண் ரூ.20.1 லட்சத்திற்கும்,  HP 990003 என்ற எண் ரூ.10.5 லட்சத்திற்கும் ஏலம்  போனது. மேலும், HP-990004  என்ற எண் ரூ.9.97 லட்சத்திற்கும், HP-990000 என்ற எண் ரூ.1.72 லட்சத்திற்கும் ஏலம் போயின. இவையெல்லாம் தான் லட்ச ரூபாயில் ஏலம் போயின.


இதனை அடுத்து, HP-990006 மற்றும் HP-990008 என்ற எண் ரூ.75 ஆயிரத்திற்கும், HP-990069 மற்றும் HP-0099 என்ற எண் ரூ.50 ஆயிரத்திற்கும், HP-990111, HP-990999, HP-991111, HP-997777 ஆகிய எண்கள் தலா ரூ.15 ஆயிரத்திற்கு ஏலம் போயிருந்தது குறிப்பிடத்தக்கது. 26 பேர் பங்கேற்ற ஏலத்தில் அதிகபட்சமாக ஹிமாச்சலை சேர்ந்த நபர் தான் அவரது ஸ்கூட்டிக்கு ரூ.1.12 கோடி கொடுத்து பேன்சி நம்பர் பிளேட் வாங்கியுள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.




மேலும் படிக்க


Danish royal family: தமிழ்நாடு வரும் டென்மார்க் நாட்டின் இளவரசர் குடும்பம் - ஏற்பாடு பணிகள் தீவிரம்