Mi-17 ஹெலிகாப்டர் மூலம் சேதமடைந்த ஹெலிகாப்டரை தூக்கிச் சென்றபோது மந்தாகினி ஆற்றின் அருகே விழுந்து நொறுங்கியது. இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
விழுந்து விபத்து:
உத்தரகாண்டில், சில மாதங்களுக்கும் முன்பு தனியார் ஹெலிகாப்டரானது கேதார்நாத் தாமில் தரையிறங்கும் போது சேதமடைந்தது. இந்த சேதமடைந்த ஹெலிகாப்டரை, பழுதுபார்க்கும் பணிக்காக கௌச்சர் விமான ஓடுதளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அப்போது MI-17 இராணுவ ஹெலிகாப்டரானது பயன்படுத்தப்பட்டது. அப்போது, மீட்பு பணியின்போது கயிறு கட்டி பழுதான ஹெலிகாப்டர் தூக்கிச் செல்லப்பட்டது. அப்போது, தனியார் விமானமானது விழுந்து மந்தாகினி ஆற்றின் அருகே விழுந்தது. இந்த விபத்தில் காயமோ, உயிர்சேதமோ ஏற்படவில்லை. இந்த காட்சியானது கேமராவில் பதிவாகியுள்ளது.
விழுந்தது எதனால்?;
இந்திய விமானப்படையின் கூற்றுப்படி, "மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் விழுந்ததாகவும், உயிர் அல்லது உடைமைக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்பதையும் தெரிவித்துள்ளனர்.
மேலும் , இந்த விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
விபத்திற்குள்ளான ஹெலிகாப்டர் ஒரு தனியார் நிறுவனத்தால் இயக்கப்பட்டது என்றும், முன்னதாக கேதார்நாத் கோவிலுக்கு பயணிகளை ஏற்றிச் செல்லும் பணியில் ஈடுபட்டிருந்தது என்றும் கூறப்படுகிறது.
மே 24, 2024 அன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அது அவசரமாக தரையிறக்கப்பட்டது.
ஹெலிகாப்டரின் எடை மற்றும் காற்றின் காரணமாக Mi-17 சமநிலையை இழக்கத் தொடங்கியது, இதன் காரணமாக ஹெலிகாப்டரை தாரு முகாம் அருகே , அந்த ஹெலிகாப்டரை விடுவிக்க வேண்டியதாயிற்று என்று கூறப்படுகிறது.
ஹெலிகாப்டரில் பயணிகளோ, பொருட்களோ இல்லை. தகவல் கிடைத்ததும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். குழு நிலைமையை ஆய்வு செய்து வருகிறது என்றும் தகவல் தெரிவிக்கின்றன.