தமிழ்நாடு: 



  • கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா மரணத்தில் தொடர்புடைய மருத்துவர்களுக்கு முன்ஜாமீன் மறுப்பு; சென்னை உயர் நீதிமன்றம்.

  • தமிழகத்தில் இன்றும் நாளையும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு; சென்னை வானிலை மையம் தகவல்

  • வரும் 20, 21, 22 தேதிகளில் சென்னை உட்பட தமிழகத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை. 

  • தொழில் நிறுவனங்களை ஈர்க்கும் மாநிலமாக தமிழகம் இருக்கிறது; முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.

  • விஷவாயு தாக்கி நான்கு தொழிலாளார்கள் இறந்த விவகாரத்தில் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டிடத்தை 15 நாட்களுக்குள் இடிக்க கரூர் ஆணையர் உத்தரவு.  


இந்தியா: 



  • சுங்கச்சாவடி கட்டணங்களை 40 சதவீதம் வரை குறைக்கவுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தி.மு.க. எம்.பி வில்சனுக்கு கடிதம். 

  • இந்திய ஒற்றுமை பயணத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்; தொண்டர்கள் அதிர்ச்சி; தீவிர பாதுகாப்பு வலையத்துக்குள் ராகுல்.

  • தனியார் துறை ராக்கெட்களின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், 'பிரரம்ப்' (prarambh) என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக, விக்ரம்-எஸ் ராக்கெட் 3 செயற்கைக்கோள்களை புவி வட்டார சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தம். 

  • ஹைதரபாதில் பாஜக எம்.பி வீட்டை அடித்து நொறுக்கிய டி.ஆர்.எஸ். தொண்டர்கள்; தெலுங்கானாவை உலுக்கிய  வன்முறை சம்பவம். 

  • ஐ.நா போன்ற சர்வதேச அரங்குகளில் அடிக்கடி பொய் பிரச்சாரங்களை முன்வைக்கும் கெட்ட பழக்கம் கொண்டுள்ள பாகிஸ்தானுக்கு சர்வதேச சமூகம் கூட்டாக கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தல்.

  • தெலுங்கானா அரசு கல்லூரியில் ஏற்பட்ட ரசாயன வாயு கசிவால் அடுத்தடுத்து 25 மாணவர்கள் மயக்கம்; மருத்துவமனையில் அனுமதி.

  •  சபரிமலையில் அனைத்து பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற கேரள அரசின் அறிவுறுத்தல் வாபஸ் பெறப்பட்டதாக அறிவிப்பு. 

  • குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்முறையாக கிறிஸ்துவர் ஒருவருக்கு சீட் வழங்கிய பாஜக.

  • மேற்கு வங்க புதிய அளுநராக டாக்டர் சி.வி ஆனந்த போஸை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு. 

  • 135 பேரை பலிவாங்கிய குஜராத் தொங்குபால விபத்துக்கு நாங்கள் தான் காரணம் என முனிசிபல் கார்பரேஷன் நீதிமன்றத்தில் தெரிவிப்பு. 


உலகம்: 



  • பெண்ணின் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட 4 அடி நீள பாம்பு; உறைய வைக்கும் வீடியோவால் அதிர்ச்சி.

  • சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானத்தின் பைலட் , பயணி ஒருவரின் அலைபேசியை கொடுப்பதற்காக காக்பிட் ஜன்னலின் வெளியே எட்டிப்பார்த்து கொடுத்த காட்சி இணையத்தில் வைரல்.

  • அமெரிக்காவில் ஓடும் டிரக்கின் மேல் ஏறி நடனமாடிய நபர் மேம்பாலத்தில் மோதி உயிரிழப்பு. 


விளையாட்டு:



  • நாளை கத்தாரில் தொடங்குகிறது 22வது ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து திருவிழா.

  • இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி மழையால் ரத்து. 

  • இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவை கூண்டோடு நீக்கி பி.சி.சி.ஐ அதிரடி  முடிவு. 

  • 2007 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் வெப் சீரிஸ் ஆக உருவாகிறது. 

  • தாய்லாந்தின் நடைபெறும் ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸில் இந்தியா முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேற்றம்.