தமிழ்நாடு:



  • ராஜிவ்காந்தி கொலை வழக்கு : நளினி உள்ளிட்ட 6 பேரும் விடுதலை - உச்சநீதிமன்றம் அதிரடி 

  • தற்சார்புடைய இந்தியாவை உருவாக்குவதில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது : திண்டுக்கல் காந்தி கிராம பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பெருமிதம்

  • ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி கடலோரத்தில் நீடிப்பதால் 17 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - 25 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

  • மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு திட்டம் துவக்கம் : அரசக்குறிச்சியில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவிப்பு

  • சென்னையில் மழைநீர் தேங்காமல் இருக்க அரசு முழுக்கவனம் செலுத்தி வருகிறது : அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

  • கோவை கார் வெடிப்பு வழக்கு ; தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஜமேஷா முயின் திட்டமிட்டார் என என்.ஐ.ஏ தகவல்

  • காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என பிரதமரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.

  • காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்க தமிழ்நாட்டில் இருந்து 2 ஆயிரம் மாணவர்கள் கட்டணம் இல்லாமல், வாரணாசி செல்ல உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை இந்திய ரயில்வே செய்து உள்ளது.

  • சென்னை எழும்பூரில் இருந்து சேலம் வழியே கொல்லத்திற்கு 3 சபரிமலை சிறப்பு ரயில்களை இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.


இந்தியா: 



  • தென்னிந்தியாவில் முதல் முறையாக அறிமுகம்; சென்னை - மைசூர் வந்தே பாரத் ரயில் இன்று முதல் இயக்கப்படும்

  • இமாச்சல், குஜராத் சட்டமன்ற தேர்தல் : வரலாறு காணாத பணம், மதுபானங்கள் அறிமுதல் - தேர்தல் ஆணையம் அதிர்ச்சி

  • குஜராத் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 46 வேட்பாளர்களைக் கொண்ட இரண்டாவது வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது.

  • ஜம்மு-காஷ்மீர்: ராணுவ வீரர்கள் நடத்திய என்கவுண்டர்: பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொலை


உலகம்: 



  • 800 கோடி தொட்டது உலக மக்கள் தொகை : சீனாவை முந்தும் இந்தியா

  • காபூலில் உள்ள பொழுதுபோக்கு பூங்காக்களில் பெண்கள் நுழையக்கூடாது என்று ஆப்கானிஸ்தானின் 'ஒழுக்கக் காவல்' உத்தரவிட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

  • மத்திய மெக்சிகோவில் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள மதுபான விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டனர், 2 பேர் காயமடைந்தனர்.

  • ஜோர்டானில் இருந்து லெபனான் தலைநகர் பெய்ரூட் நோக்கிச் சென்ற மத்திய கிழக்கு ஏர்லைன்ஸ் (middle east airlines) பயணிகள் விமானம் தரையிறங்கும் போது தோட்டாவால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.