தமிழ்நாடு:
⦁ தமிழகத்தில் 42 இடங்களில் என்ஐஏ சோதனை செய்தது. கோவை கார் வெடிப்பு வழக்கு தொடர்பாக தமிழகத்தில் 42 இடங்களில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இதில், பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
⦁ மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்த அழகுசிறை கிராமத்தில் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் பெண் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
⦁ தமிழகத்தில் மழை தொடர்ந்தாலும் விவசாயிகளுக்கு பாதிப்பில்லை என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.


இந்தியா:
⦁ ஆதார் பதிவு செய்த நாளில் இருந்து ஒவ்வொரு 10 ஆண்டுக்கும் குறைந்தபட்சம் ஒருமுறையாவது தங்களது அடையாளச் சான்று, முகவரி உள்ளிட்ட விவரங்களைப் புதுப்பிப்பதை அவசியமாக்கும் வகையில் ஆதார் ஒழுங்குமுறை விதிகளில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது.
⦁ உச்சநீதிமன்றத்தில் பதியப்படும் புதிய வழக்குகள் அடுத்த வாரத்தின் அதே நாட்களில் விசாரணைக்கு பட்டியலிடப்பட வேண்டும் என பதிவாளருக்கு அறிவுறுத்தியிருப்பதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தார்.
⦁ இந்தோனேசியாவின் வரும் நவம்பர் 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடைபெறும் ஜி20 மாநாட்டில் பிரதமர் நரேநத்திர மோடி பங்கேற்க உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
⦁ சிவலிங்கம் உள்ளதாகக் கூறப்படும் ஞானவாபி மசூதிக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை நீட்டிப்பது தொடர்பான வழக்கை விசாரிப்பதற்கான நீதிபதிகள் அமர்வை உச்சநீதிமன்றம் இன்று அறிவிக்கவுள்ளது.
⦁ குஜராத் சட்டசபைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் 160 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய முதல்கட்ட  பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.


Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!


உலகம்:
⦁ மாலத்தீவு தலைநகர் மாலேவில் எம்.நிருஃபி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் அமைந்திருந்த வாகன பழுதுபார்க்கும் மையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 8 இந்தியர்கள் உள்பட 10 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
⦁ ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைன் தலைநகரான கெர்சானிலிருந்து தங்களது படையினர் வெளியேறத் தொடங்கியுள்ளனர் என்று ரஷ்யா அறிவித்துள்ளது.
⦁ உக்ரைன் போரில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ரஷ்ய படையினர் உயிரிழந்திருக்கக் கூடும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
⦁ ஆப்கானிஸ்தானில் ஜிம்களுக்கு செல்ல பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.



விளையாட்டு:


⦁ டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2ஆவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் மோசமான தோல்வியைச் சந்தித்தது.
⦁ ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் உலக பாரா துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சங் ராஜ் அதானா, ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் எஸ்ஹெச்1 பிரிவில் 4ம் இடம் பிடித்தார்.
⦁ ஜோர்டானில் நடைபெறும் ஆசிய எலைட் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியா இதுவரை 4 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.
டி20 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தும், பாகிஸ்தானும் மோதவுள்ளன. இந்த ஆட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை மெல்போர்னில் நடைபெறவுள்ளது.