8AM Headlines: இன்றைய 8 மணி தலைப்பு செய்திகள்..! இதுவரை உங்களைச் சுற்றி நிகழ்ந்தது என்ன..?

Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்பு செய்திகளாக கீழே காணலாம்.

Continues below advertisement

Headlines Today: 

Continues below advertisement

தமிழ்நாடு:

  • இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, தமிழகத்தில அடுத்த சில நாட்களுக்கு மழை நீடிக்கும்
  • தொடர் மழையால் குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு, பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிக்க தடை
  • நாகை மயிலாடுதுறை பகுதியில் நள்ளிரவு வரை நீடித்த மழை, தஞ்சாவூரில் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர்
  • அதிமுக ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட சீரழிவுகளை சீர்செய்ய பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம், திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
  • ஜி 20 மாநாடு தொடர்பாக டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டம், தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி உள்ளிட்டோருக்கு அழைப்பு
  • தமிழக ஆளுநரை திரும்பப் பெற நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவோம் என திருமாவளவன் பேட்டி, ஆர்.எஸ்.எஸ் தொண்டர் போல் செயல்படுகிறார் என விமர்சனம்
  • திருவண்ணாமலையில் தீபத்திருவிழா ஒட்டி மகாதீபம் ஏற்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது, மகாதீபம் ஏற்ற கொப்பறை மலைக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

இந்தியா 

  • குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி  நடைபெற்று வருகிறது. 93 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.
  • டெல்லியில் மாநகராட்சி தேர்தலில் மந்தமான வாக்குப்பதிவு, சுமார் 50% வாக்குகளே பதிவானது
  • ஜி 20 மாநாடு தொடர்பாக டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டம்.

உலகம்

  • பெலாரஸ் ரஷ்யா நாடுகள் ராணுவ ஒத்துழைப்பு தொடர்பான புதிய ஒப்பந்தம் கையெழுத்து, உக்ரேன் மீதான தாக்குதல் 8 மாதங்கள் மேல் நீடிக்கும் நிலையில் இந்த ஒப்பந்தம். 
  • சைபீரியா பகுதியில் பனியால் உறைந்த நீரில் மக்கள் ஆனந்த குளியல், நோய் எதிர்ப்பு சக்தி 400 மடங்கு அதிகரிக்கும் என்று நம்பிக்கை 

விளையாட்டு

  • FIFA உலக கோப்பை கால்பந்து போட்டியில் போலாந்தை வீழ்த்தி பிரான்ஸ் காலிறுதி போட்டிக்கு முன்னேற்றம், செனகல் அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
  • மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, 164 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி
Continues below advertisement