தமிழ்நாடு:
- கலைஞர் கருணாநிதியின் 5ம் ஆண்டு நினைவு தினம்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி - அமைச்சர்கள், எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
- அமைச்சர் செந்தில் பாலாஜி மனு தள்ளுபடி: அமலாக்கத்துறை 5 நாள் விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி
- வருமானத்திற்கு அதிகமாக ரூ. 35 கோடி சொத்து குவித்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் 29ம் தேதி ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
- லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த உயர் கல்வித்துறை அனுமதி கேட்டு கடிதம்; சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் மீது முறைகேடு புகார்
- தமிழ்நாட்டில் வெயில் 2 முதல் 4 டிகிரி அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்
- ராஜஸ்தானை போல தமிழ்நாட்டிலும் புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும் - ராமதாஸ் கோரிக்கை
- கருணாநிதியின் நினைவு தின பேரணியில் பங்கேற்று மாரடைப்பால் உயிரிழந்த சென்னை மாநகராட்சி கவுன்சிலர் கு.சண்முகம் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
- இந்திய மொழிகள் அனைத்தும் எனது தாய் மொழிகள்தான் - குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
- அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது
- காவிரி விவகாரத்தில் வரலாறு தெரியாமல் பேசுவதாக கூறிய அமைச்சர் துரைமுருகனுக்கு ஓபிஎஸ் கடும் கண்டனம்
இந்தியா:
- மணிப்பூர் கலவரம் தொடர்பாக கள ஆய்வு மேற்கொள்ள, ஓய்வு பெற்ற நீதிபதிகள் 3 பேர் கொண்ட குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- டெல்லியில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு, காங்கிரஸ் முன்னாள் தலைவர்களான சோனியாகாந்தி மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
- கடந்த நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்தவர்களின் பட்டியலில், மாநில வாரியாக மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது.
- இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற சிலர் முட்டுக்கட்டை போடுகிறார்கள் என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.
- உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க நாடாளுமன்றக்குழு பரிந்துரை
உலகம்:
- ஆப்கானிஸ்தானில் தொண்டு நிறுவனம் வழங்கிய உணவை சாப்பிட்ட 200 பேர் மயக்கமடைந்துள்ளனர்.
- இலங்கையில் விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கியதில் 2 வீரர்கள் உயிரிழப்பு
- சிரியா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் - பாதுகாப்புப்படையினர் 4 பேர் உயிரிழப்பு
- வங்காளதேசத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 300 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விளையாட்டு:
- வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இன்று களமிறங்கிறது இந்திய அணி. இதில், தோல்வியடைந்தால் இந்திய அணி தொடரை இழக்கும்.
- ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: தென்கொரியாவை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது இந்தியா.
- சொந்த மண்ணில் ஒருநாள் உலகக் கோப்பையை வெல்வோம் - ரோகித் சர்மா நம்பிக்கை.
- பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்ஜமாமுக்கு மீண்டும் தேர்வு குழு தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.