தமிழ்நாடு:
- போட்டி நிறைந்த இன்றைய சூழலில் கவலையில் மூழ்கிவிடாமல் திறமையில் நம்பிக்கை வைத்து முன்னேறுங்கள் : சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் குடியரசு தலைவர் அறிவுரை
- கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு நடந்த மாரத்தான் போட்டி கின்னஸ் சாதனை படைத்தது : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார்.
- அமமுக பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் மீண்டும் தேர்வு : தலைவராக முன்னாள் எம்.பி. கோபால் நியமனம்
- எழும்பூர் அரசு மருத்துவமனையில் கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழப்பு
- புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் வருகையையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- ராகுல் காந்திக்கு ஏன் இன்னும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கொடுக்கப்படவில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
- அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட குடிநீர் திட்டத்தை நிறைவேற்றாத திமுக அரசிற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
- தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- சேலம், திருச்சி, சிவகங்கை, மயிலாடுதுறை மாவட்டங்களின் காவல்துறை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியா:
- தமிழ்நாட்டில் 18 உட்பட 508 ரயில் நிலையங்கள் நவீன மயம்: பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
- உச்சநீதிமன்ற தீர்ப்பால் ராகுலுக்கு மீண்டும் எம்.பி பதவி மக்களவை சபாநாயகர் இன்று அறிவிப்பு : நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நாளை விவாதம்
- ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியா வருகை தர உள்ளதால் தற்போது முதல் பாதுகாப்பு உள்ளிட்ட பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
- குடியரசு தலைவர் திரவுபதி முர்முவுக்கு நினைவுப் பரிசு வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
- லக்னோவில் இருந்து கோரக்பூருக்குச் சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரெயில் மீது 3வது முறையாக கற்கள் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- சந்திரயான் 3 விண்கலம் எடுத்த நிலவின் வீடியோவை வெளியிட்டது இஸ்ரோ.
உலகம்:
- ஆப்கானிஸ்தானில் பெண் குழந்தைகள் 3ம் வகுப்பிற்கு மேல் படிக்க தடை? அதிர்ச்சி தகவல்.
- மொராக்கோவில் மினி பஸ் கவிழ்ந்து விபத்தில் 24 பேர் உயிரிழப்பு. வட கொரியாவின் ஆயுத தொழிற்சாலைகளில் உற்பத்தியை அதிகரிக்க கிம் ஜாங் உன் உத்தரவு.
- பாகிஸ்தானில் ரெயில் விபத்து: 22 பேர் உயிரிழப்பு, 80 க்கும் மேற்பட்டோர் காயம்.
- அடுத்த மாதம் அதிபர் ஜோ பைடன் இந்தியாவிற்கு வர உள்ளதாக அமெரிக்க உதவி செயலாளர் டொனால்ட் லூ தகவல் தெரிவித்துள்ளார்.
விளையாட்டு:
- இந்தியாவிற்கு எதிரான 2வது டி20 போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது வெஸ்ட் இண்டீஸ்.
- ஆசிய ஆக்கி போட்டி: பாகிஸ்தான் - ஜப்பான் போட்டி 'டிரா'
- ஐசிசி உலகக்கோப்பை தொடரில் விளையாட இந்தியாவிற்கு வருகை தர, பாகிஸ்தான் அணிக்கு அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
- ஆஸ்திரேலியா பேட்மிண்டன் ஓபன் தொடரில் இந்திய வீரர், பிரனாயை வீழ்த்தி சீன வீரர் வெங் ஹாங் யாங் சாம்பியன் பட்டம் வென்றார்.