தமிழ்நாடு:



  • சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின் - வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் முடிந்து இன்று வீடு திரும்புவார் என தகவல்

  • அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொண்டர்வு மனு - இன்று தீர்ப்பு அளிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்

  • காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்டும் கர்நாடகாவின் திட்டம் - இன்று டெல்லி விரைகிறார் அமைச்சர் துரைமுருகன் 

  • தொடர்ந்து அதிகரிக்கும் தக்காளி விலை - சென்னையில் 82 ரேஷன் கடைகளில் இன்று முதல் விற்பனை செய்ய நடவடிக்கை

  • சென்னையில் பணியின் போது செல்போன்கள் பயன்படுத்தக் கூடாது - மாநகர காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவு

  • குழந்தை கை இழந்த விவகாரத்தில் இன்று அறிக்கை சமர்பிக்கப்படுகிறது  - அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்

  • 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்

  • மக்களை தேடி திட்டம் - சென்னை மேயர் பிரிய நாளை அடையாறு பகுதியில் பொதுமக்களிடம் குறை கேட்கிறார்


இந்தியா:



  • பெங்களூருவில் நடைபெற்ற சத்யசாய் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற குடியரசு தலைவர் திரவுபது முர்மு - பெண்கள் தற்போது கல்வியில் சாதித்து வருவது என்பது டிரைலர் தான், மெயின் பிக்சர் இன்னும் வரவில்லை என பேச்சு

  • பிரதமர் மோடி தலைமையில் இன்று தொடங்குகிறது ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு

  • ஒடிசா ரயில் விபத்திற்கு தவறான சிக்னலே காரணம் - ரயில்வே பாதுகாப்பு ஆணையம் விளக்கம்

  • சந்திராயன் - 3 விண்கலம் ஜுலை 13 முதல் 19ம் தேதிக்குள் விண்ணில் செலுத்தப்படும் - இஸ்ரோ அறிவிப்பு

  • 76% 2000 ரூபாய் நோட்டுகள்  திரும்பப் பெறப்பட்டுள்ளன - ரிசர்வ் வங்கி தகவல்

  • மணிப்பூரில் கட்டுக்குள் வருகிறதா கலவரம்? - 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை பள்ளிகள்: திறப்பு

  • கட்சி தலைமையை மீறி பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்த விவகாரம் - தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து 5 முக்கிய தலைவர்களை  நீக்கி உத்தரவு


உலகம்:



  • அமெரிக்காவில் நடைபெற்ற பகவத் கீதையை உச்சரிக்கும் நிகழ்ச்சியில் 10 ஆயிரம் பேர் பங்கேற்பு

  • அமெரிக்காவில் கல்லூரி மாணவிகளின் மேலாடையை களைய கூறிய விவகாரம் - 3 ஆண்டுகளுக்குப் பின் பணி நீக்கம் செய்யப்பட்ட பேராசிரியர்

  • இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதல் - பாலஸ்தீனிய ஆயுதக்குழுவினர் 8 பேர் பலி

  • ஒரே நேரத்தில் குவிந்த 45 ஆயிரம் போலீசார் - பற்றி எரியும் பிரான்ஸ் - வன்முறையை கைவிடுமாறு கலவரத்தில் பலியான சிறுவனின் பாட்டி வேண்டுகோள்


விளையாட்டு:



  • தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்: 9வது முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் குவைத்துடன் இன்று பலப்பரீட்சை நடத்துகிறது இந்தியா

  • டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் பிளே-ஆஃப் சுற்றை எட்டும் நான்காவது அணி எது? - இன்று நடைபெறும் லீக் போட்டியில் மதுரை - திருப்பூர் அணிகள் பலப்பரீட்சை

  • விம்பிள்டன் டென்னிஸ் - முதல் சுற்றில் ஜோகோவிச், ஸ்வியாடெக் வெற்றி