தமிழ்நாடு:



  • சனாதன, வருணாசிரமம் குறித்து ஆளுநர் பேசி வருவது நமக்கு விளம்பரமாக அமைகிறது - தமிழறிஞர்  மா. நன்னன் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

  • மதுரை அதிமுக மாநாடு - ஆட்சி மாற்றத்தின் கால்கோள் விழாவாக அமையும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேச்சு

  • தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் பிரதிபலிக்கிறது - பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பேச்சு

  • அன்னூருக்கு ஒரு நியாயம், கடலூருக்கு ஒரு நியாயம் என்பது போல அண்ணாமலை பேசுகிறார் - என்.எல்.சி விவகாரத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

  • டிடிவி தினகரன் தலைமையில் அமமுக பொதுக்குழுக் கூட்டம் - வானகரத்தில் 6ம் தேதி கூடுகிறது

  • லஞ்சம் வாங்கியதாக வீடியோ வெளியான விவகாரம் - தேனி மருத்துவ கல்லூரி முதல்வர் பணியிடை நீக்கம்

  • திருச்சியில் மகள் தலையில் கல்லைப் போட்டு கொன்ற தாய் - சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வர மறுத்ததால் ஆவேசம்


இந்தியா:



  • வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் - நேற்று மாலை 6 கோடிக்கும் அதிகமானோர் தாக்கல் செய்துள்ளதாக தகவல்

  • சுதந்திர தினத்தன்று வீடுகளில் அனைவரும் தேசிய கொடி ஏற்றுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள்

  • எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பிலான எம்.பிக்கள் குழு மணிப்பூர் சென்று திரும்பிய நிலையில் இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம் - நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது எப்போது விவாதம் நடைபெறும் என எதிர்பார்ப்பு

  • மத்திய அரசின் மீது மணிப்பூர் எம்.பிக்கள் நம்பிக்கை இழந்து விட்டதாக, இந்தியா கூட்டணி எம்.பிக்கள் குற்றச்சாட்டு

  • நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்றுக்கொண்ட பிறகு அனைத்து மசோதாக்களையும் நிறைவேற்றுவது அரசியலமைப்பு ரீதியாக சந்தேகத்தை எழுப்புவதாக காங்கிரஸ் சாடல்

  • தக்காளி விலை உயர்வால்  கண்ணீர் விட்டு அழுத காய்கறி வியாபாரி - ராகுல் காந்தி பகிர்ந்த வீடியோ

  • கடந்த 3 ஆண்டுகளில் 13 லட்சம் பெண்கள் மாயம் - மத்திய அரசு அதிர்ச்சி தகவல்

  • மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து மகாராஷ்டிராவில் நடந்த பேரணியில் வன்முறை - கல்வீச்சில் 10 போலீசார் காயம்

  • கேரளாவில் செல்ஃபியால் விபரீதம் - ஆற்றில் தவறி விழுந்த புதுமண தம்பதி பலி


உலகம்:



  • பாகிஸ்தானில் அரசியல் கட்சி கூட்டத்தில் குண்டு வெடிப்பு  - பலி எண்ணிக்கை 44 ஆக உயர்வு

  • ஆஃப்கானிஸ்தானில் இசைக்கு தடை - பறிமுதல் செய்யப்பட்ட இசைக்கருவிகளை தீயிட்டு எரித்த தாலிபன்

  • அமெரிக்காவின் வெடிமருந்து கிடங்காக மாறிய தைவான் - சீனா குற்றச்சாட்டு

  • உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பான உச்சிமாநாடு - சவுதி அரேபியா ஏற்பாடு

  • எரிபொருள் தீர்ந்ததால் பூமிக்கு திரும்பி கடலில் விழுந்த ஐரோப்பிய செயற்கைக்கோள்


விளையாட்டு:



  • ஸ்பெயின் ஹாக்கி தொடர் - இந்திய ஆண்கள் அணிக்கு வெண்கலப்பதக்கம்

  • சர்வதேச போட்டிகளில் ஓய்வு அறிவித்த இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் - 4ம் நாள் போட்டியின் போது அணிவகுத்து நின்று மரியாதை செலுத்திய சக வீரர்கள்

  • உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் - சென்னை, பெங்களூரு மைதானத்தில் ஐசிசி குழு ஆய்வு