தமிழ்நாடு:



  • சென்னையை அடுத்த பொத்தேரியில் டிப்பர் லாரி மோதி பயங்கரம்: கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேர் உயிரிழப்பு

  • மணிப்பூரை மறந்துவிட்டு தமிழ்நாட்டை குறி வைப்பது ஏன்..? அமைச்சர் எ.வ.வேலு கேள்வி

  • நடிகை ஜெயப்பிரதாவுக்கு 6 மாதம் சிறை : எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பு

  • நாங்குநேரி சம்பவம்: ”தம்பி சின்னதுரையின் கல்லூரி செலவை அண்ணனாக நானே ஏற்கிறேன்” - அமைச்சர் அன்பில் மகேஷ் உருக்கம்

  • ஆகஸ்ட் 15-ம் தேதி ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடியை ஏற்றுங்கள் - ஆளுநர் ஆர்.என்.ரவி

  • காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவு: காவிரி மேலாண்மை ஆணையம் அதிரடி

  • அர்ச்சகர்களின் பணி நியமனத்தை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதித்து உத்தரவு 

  • சட்டங்களுக்கு இந்தியில் பெயர் வைத்திருப்பது மொழி சர்வாதிகாரத்தை காட்டுகிறது என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

  • டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு இன்று காலை ராகுல்காந்தி வர உள்ளார். பின்னர் கார் மூலம் நீலகிரி வழியாக கேரள மாநிலம் வயநாடுவிற்கு அவர் செல்ல உள்ளார்.

  • வடகிழக்கு மாநிலங்களில் இருந்து போதைப்பொருள் கடத்தப்படுவதன் மூலம்தான் தமிழ்நாட்டில் போதைப்பொருள்கள் நுழைய முக்கிய ஆதாரமாக இருப்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


இந்தியா: 



  • இந்திய குற்றச் சட்டங்களுக்கு மாற்றாக 3 புதிய மசோதாக்கள் அறிமுகம்: நாடாளுமன்றத்தில் அமித்ஷா தாக்கல்

  • குட்கா முறைகேடு வழக்கில் 8 அதிகாரிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு அனுமதி : நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல்

  • நாடாளுமன்ற இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு 

  • மணிப்பூர் தீப்பற்றி எரியும்போது நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி சிரிப்பது, கேலி செய்வது அழகல்ல: ராகுல்காந்தி பரபரப்பு குற்றசாட்டு

  • இன்று நடைபெறவிருந்த இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தலுக்கு இடைக்கால தடை விதித்து பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • பாலியல் வழக்கில் பிரிஜ் பூஷனுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் உள்ளது - நீதிமன்றத்தில் காவல்துறை அதிரடி

  • குஜராத் உயர் நீதிமன்றத்தின் நான்கு நீதிபதிகளை வேறு நீதிமன்றங்களுக்கு மாற்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.


உலகம்: 



  • 47 ஆண்டுகளுக்கு பிறகு நிலவை ஆராய்வதற்காக லூனா-25 விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியது ரஷ்யா

  • இஸ்ரேலிய பாதுகாப்புப்படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய பாலஸ்தீனியர் சுட்டுக்கொலை.

  • சிரியா மீது துருக்கி வான்வழி தாக்கல் நடத்தியதில் கிளர்ச்சியாளர்கள் 12 பேர் உயிரிழப்பு.

  • ஹவாய் தீவில் பயங்கர காட்டுத்தீ; உயிரிழப்பு 53 ஆக உயர்வு; 1,000 பேர் மாயம்.

  • டொனால்ட் ட்ரம்ப் பதிவுகளை வழங்க தாமதம் செய்ததாக ட்விட்டர் நிறுவனத்துக்கு ரூ.2.9 கோடி அபராதம் விதித்து அமெரிக்க உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

  • மலேசியாவில் ஓரின சேர்க்கையை ஆதரிக்கும் சுவிட்சர்லாந்து நிறுவன தயாரிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

  • ஈகுவடார் அதிபர் வேட்பாளர் சுட்டுக் கொலை: அவரச நிலை பிரகடனம்


விளையாட்டு: 



  • ஆசியன் ஹாக்கி சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி : இந்தியா- மலேசியா அணிகள் இன்று மோதல்.

  • இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 4வது டி20 போட்டி இன்று நடக்கிறது. 

  • ஆசியன் ஹாக்கி சாம்பியன்ஷிப்: மலேசிய அணி தென் கொரியா அணியை 6-2 என்ற கணக்கில் வீழ்த்தி முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.