Headlines Today, 7 Dec: நிலவில் மர்மம்... ரூ.50 ஆயிரம் நிவாரணம்... 22 பேர் பலி... இன்னும் பல!

Headlines Today, 7 Dec: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற, இன்று நடக்கவுள்ள பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

Continues below advertisement

தமிழ்நாடு:

Continues below advertisement

* கொரோனா தொற்றால் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

* அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் போட்டியின்றி தேர்வானதாக கட்சி தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

* குழந்தைகள் மீதான குற்ற தடுப்பு நடவடிக்கை விழிப்புணர்வு வாகனத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

* ராமநாதபுரத்தில் போலீசார் தாக்கியதில் மாணவர் உயிரிழந்ததாக கூறப்படும் விவகாரத்தில், உரிய விசாரணை எடுக்க வேண்டும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

* தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

* தமிழ்நாட்டில் நேற்று 719 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 743 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 10 பேர் உயிரிழந்தனர்.

இந்தியா:

* நாகலாந்து துப்பாக்கி சூடு விவகாரத்தில் துணை ராணுவ படை மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்த 15 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.16 லட்சம் இழப்பீடு வழங்கப்படுகிறது.

* டெல்லியில் இந்தியா - ரஷ்யா உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி - அதிபர் புடின் பேச்ச்சுவார்த்தை நடத்தினர். ராணுவம், விண்வெளி, எரிச்சக்தி துறையில் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது.

* மகாராஷ்டிராவில் மேலும் இருவருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதியானது. இதன்மூலம் நாடு முழுவதும் ஒமிக்ரான் தொற்று எண்ணிக்கை 23 ஆக அதிகரித்தது.

உலகம்:

* இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.

* ராணுவத்திற்கு எதிராக அதிருப்தியை தூண்டியதற்காக, மியான்மரின் ஜனநாயக தலைவர் ஆங்சாங் சூ கி க்கு மியான்மர் நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.

* நிலவில் க்யூப் வடிவில் மர்மப் பொருள் ஒன்றை சீனாவின் ஆராய்ச்சி ரோவர் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது.

* 2500 ஆண்டு பழமையான இரண்டு கல்லறைகள்.. தங்க நாக்கு பொருத்தப்பட்ட மம்மி எகிப்து நாட்டில் கண்டெடுப்பு.

விளையாட்டு:

* நியூசிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 372 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடரையும் கைப்பற்றியது.

* இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான கிரிக்கெட் தொடரின் புதிய அட்டவணை வெளியானது. வரும் 26ஆம் தேதி செஞ்சூரியனில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.

 

மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொட

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

 

 

 

Continues below advertisement