* தமிழ்நாடு முழுவதும் தியேட்டர்கள், பூங்காக்கள் இன்று முதல் திறக்கப்படுகின்றன. கடைகளும் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


* ஆந்திரா, கர்நாடக மாநிலங்களுக்கு இன்று முதல்  பேருந்து போக்குவரத்துக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.


* 2021 செப்டம்பர் 13-ம் தேதி நடைபெறவிருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான திமுக வேட்பாளராக  எம்.எம் அப்துல்லா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.


* மணிப்பூர் மாநிலத்தின்  புதிய ஆளுநராக பாஜக முன்னாள் தலைவர் இல.கணேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.


* கென்யாவின் நைரோபியில் நடைபெற்ற உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி 3 பதக்கங்களுடன் நிறைவு செய்துள்ளது.


* தமிழ்நாட்டில் நேற்று 1630 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 931 ஆகும். பெண்கள் 699 நபர்கள் ஆவர். இதனால், மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 855 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தின் தலைநகரான சென்னையில் மட்டும்  177 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


* தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


* காபூல் விமான நிலையத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ஆப்கானிஸ்தான் மக்கள் 7 பேர் உயிரிழந்தனர்.


* நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த தமிழ் திரைப்படமான காஞ்சனா 3 யில் மூன்று நடிகைகளில் ஒருவராக நடித்த, ரஷ்யாவை சேர்ந்த மாடல் அலெக்ஸாண்ட்ரா ஜாவி, கோவாவின் சியோலிமில் உள்ள தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். கொலையா தற்கொலையா என்ற ரீதியில் கோவா போலீசார் விசாரணையை துவங்கியுள்ளனர்.


* மறைந்த உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங் உடலுக்கு தேசிய கொடி மீது பாஜக கொடியை வைத்து அந்தக் கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா அஞ்சலி செலுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


* தமிழ்நாட்டில் உள்ள அரசு கலைக்கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளுக்கு இன்று முதல் செப்டம்பர் 1ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பட்டியல் வகுப்பினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.


* சென்னையில் மெட்ரோ ரயில்கள் இன்று முதல் காலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படும். ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.


* ஆப்கானிஸ்தான் மக்களின் நலன் கருதி தேவைப்பட்டால் தலிபான் அரசுடன் ஒன்றிணைந்து செயல்படவும் தயார் என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற