• ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள் தங்களது ஆட்சியை சர்வதேச நாடுகள் அங்கீகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். பெண்கள் உட்பட அரசு ஊழியர்களைப் பணிக்குத் திரும்ப உத்தரவு பிறப்பித்துள்ளனர்.


  • ஆப்கானிஸ்தானில் தலைநகர் காபூலை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அந்த நாட்டு அதிபர் யார் என்கிற குழப்பம் நீடித்துவருகிறது. அந்த நாட்டின் புதிய அதிபராக முல்லா ஒமரின் நெருங்கிய கூட்டாளியான முல்லா அப்துல் கனி பராதர் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


  • ஆப்கானில் தலிபான்களின் அதிகாரம் தலைதூக்கியுள்ளதை அடுத்து அங்கிருந்து பல்வேறு நாட்டு மக்கள் வெளியேறி வருகின்றனர். அந்த வகையில் ஆஃப்கானில் இருக்கும் இந்தியாவின் சீக்கிய இந்து சிறுபான்மையினர்களை மீட்டுக்கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என பாதுகாப்புக்கான கேபினெட் குழுவில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.


  • தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், வருகின்ற செப்.,16ல் டெல்லி பயணம் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.தி.மு.க., சார்பில், செப்., 15ல், அண்ணாதுரை பிறந்தநாள், தி.மு.க., துவக்க நாள், ஈ.வெ.ரா., பிறந்தநாள் விழா என, முப்பெரும் விழா நடைபெற இருக்கின்ற நிலையில் அதோடு தலைநகர் டெல்லியில் புதியதாக கட்டப்பட்டுள்ள, தி.மு.க., அலுவலகத்தின் திறப்பு விழாவையும் நடத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


  • பள்ளிகள் திறப்பு எப்போது என வரும் 20ம் தேதி முடிவு செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. வருகின்ற செப்டம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படுமா என்பது குறித்து இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும். 


  • சென்னையில் டீசல் விலை 19 காசுகள் குறைந்து லிட்டர் ஒன்று 94.20 காசுக்கு விற்கப்படுகிறது. 31 நாட்களாக ஒரே விலை நீடித்து வந்த நிலையில் இன்று விலை 19 காசுகள் குறைந்திருக்கிறது.  
    அக்டோபர் 17-ம் தேதி தொடங்கும் டி-20 உலகக்கோப்பை நவம்பர் 14-ம் தேதி வரை நடைபெறும் என ஐசிசி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 


  • ஏழாவது டி-20 உலகக்கோப்பை போட்டிகளுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. அக்டோபர் 17-ம் தேதி தொடங்கும் டி-20 உலகக்கோப்பை நவம்பர் 14-ம் தேதி வரை நடைபெறும் என ஐசிசி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 


  • பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்பதற்காக டோக்கியோ செல்ல இருக்கும் இந்தியாவின் 54 இந்திய வீரர் வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி நேற்று காணொளி காட்சி மூலம் உரையாடினார்.பிரதமருடன் பேசிய இந்திய வீரர் தங்கவேல் மாரியப்பன் தன்னுடைய ஒரே குறிக்கோள் நாட்டுக்குப் பெருமை சேர்ப்பதுதான் எனக் கூறியுள்ளார்.


 


இது போன்று இன்னும் பல முக்கியச் செய்திகளை அடுத்த நொடியே அறிந்து கொள்ள ABP நாடு இணைய பக்கத்தை தொடருங்கள்.