* 2021-22ஆம் ஆண்டுக்கான தமிழ்நாட்டின் நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் புதிய வரிகள் விதிக்கப்படவில்லை. பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டன. தகுதி வாய்ந்த குடும்பங்களை கண்டறிந்த பிறகு குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


* கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை ரூ.2,756 கோடி தள்ளுபடி செய்யப்படும். பெட்ரோல் விலை 3 ரூபாய் குறைப்பு போன்றவை பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டன.


* 2க்கும் குறைவான குழந்தைகள் உள்ள மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.


* ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது அடுத்தாண்டு ஜூலை முதல் அமலுக்கு வருகிறது.


* வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்கிறார். பட்ஜெட் உரையுடன் தொடங்கும் சட்டசபை கூட்டம் செப்டம்டர் 21-ஆம் தேதி வரை மொத்தம் 29 நாட்கள் நடைபெற உள்ளது.


* உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவருக்கு வயது 77.


* பட்ஜெட் உரையை தொடங்குவதற்கு முன்பே அதிமுக வெளிநடப்பு செய்தது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் மீதான வழக்குகளை சட்டப்படி சந்திப்போம் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.


* உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என்று தொண்டர்களுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


* கொரோனா சூழல் கருதி 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பாடத்திட்டம் குறைப்பு என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.


* இந்திய அரசியலில் டுவிட்டர் தலையீடு இருப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.


* வரி ஏய்ப்பு செய்வோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.


* சிங்கார சென்னை 2.0 தொடங்கப்படும் என்று பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.


* கொரோனாவின் தாக்கம் முடிந்த உடன் தமிழ்நாட்டின் கடன் சுமையை சரி செய்ய முக்கிய சீர்திருத்தங்கள் எடுக்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.


* மக்கள் துன்பத்தில் இருப்பதை உணர்ந்து நிதியமைச்சர் நிதிநிலை அறிக்கையை தந்திருக்கிறார் என முன்னாள் மத்திய நிதியமைச்சர்  ப.சிதம்பரம் கூறியுள்ளார்.


* தமிழ்நாட்டில் நேற்று 1933 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 34 பேர் உயிரிழந்த நிலையில், 1,887 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்தனர்.


* இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 364 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. 5 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆண்டர்சன் அபார பந்துவீச்சு.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற