* முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஒரே நேரத்தில் சோதனை செய்தனர். இந்த சோதனையில் 13 லட்ச ரூபாய் பணம், ஆவணங்கள், பத்திரங்கள், ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தகவல்.


* லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை முடிந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துடன் தனித்தனியாக எஸ்.பி.வேலுமணி ஆலோசனை மேற்கொண்டார்.


* தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் செப்டம்பர் 21ஆம் தேதி வரை நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.


* அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக வேல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் பன்வாரி லால் புரோகித் அறிவித்துள்ளார்.


* திமுக தேர்தல் வாக்குறுதியின்படி, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான லஞ்ச ஒழிப்புத்துறை புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் சாமிநாதன் விளக்கம் அளித்துள்ளார்.


* எம்பி, எம்எல்ஏக்கள் மீதான குற்றவியல் வழக்குகளை உயர்நீதிமன்றம் அனுமதி இல்லாமல் வாபஸ் பெறக்கூடாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.


* மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும் என்று தெரியாது என மத்திய அரசு பதில் அளித்துள்ளது.


* தன் மீதான ஊழல் வழக்கை எஸ்.பி.வேலுமணி சட்டரீதியாக சந்திப்பார்- பாஜக பொதுச்செயலாளர் கே.டி.ராகவன்


* மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்  சுகாதார கேடுகளை விளைவிக்கும் வகையில் சட்ட விரோதமாக செயல்படும் இறைச்சிக் கடை, மீன்கடை உள்ளிட்டவற்றிற்கு அபராதம் விதிப்பது மற்றும் வளர்ப்பு பிராணிகளுக்கு உரிமம், மற்றும் சாலையில் சுற்றித்திரியும் மாடுகள், குதிரைகள் அபராதம் விதிப்பது தொடர்பாக மதுரை மாநகராட்சியால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இனி வீடுகளில் நாய், மாடு, எருமை, குதிரை வளர்த்தால் மாநகராட்சியில் ஆண்டுக்கு 10 ரூபாய் பதிவுக்கட்டணமாக செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.


* ரோல்ஸ் ராய் காருக்கான வரி விவகாரத்தில் நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து, நடிகர் விஜய் முழு வரித்தொகையான ரூபாய் 40 லட்சத்தையும் செலுத்தியுள்ளார்.


* தமிழ்நாட்டில் ஒரேநாளில் 1,893 பேருக்கு கொரோனா தொற்று. சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்பு. நேற்று ஒரேநாளில் 209 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


* ஆப்கானிஸ்தானில் 7ஆவது மாகாணமும் தாலிபான்கள் ஆதிக்கம் செலுத்தியதால் இந்தியர்கள் உடனடியாக நாடு திரும்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


* பார்சிலோனா அணியில் இருந்து வெளியேறிய கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி பிஎஸ்ஜி அணியுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அந்த அணிக்காக விளையாட 2 ஆண்டுகளுக்கு ஒப்பந்தமாகியுள்ளார்.


* சிஎஸ்கே அணி கேப்டன் தோனி மற்றும் அணி வீரர்கள் சென்னை வந்துள்ளனர். இங்கு பயிற்சி மேற்கொண்ட பிறகு ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் அணி வீரர்கள், ஐபிஎல் போட்டி தொடங்குவதற்கு முன்பு அங்கு சென்று தனிமைப்படுத்திக் கொள்ள உள்ளனர்.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற