* டோக்கியோ பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தமிழ்நாடு வீரர் மாரியப்பன் வெள்ளிப்பதக்கம் வென்றார். மாரியப்பனுக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.


* பாராலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவிற்கு ரூபாய் 2 கோடி பரிசு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.


* சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 12 காசுகள் குறைந்து ரூ.99.08க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு லிட்டர் டீசல் விலை 14 காசுகள் குறைந்து ரூ.99.38க்கு விற்பனை செய்யப்படுகிறது.


* தமிழ்நாட்டில் இன்று பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுகின்றன. பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி வகுப்புகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.


* ஜெயலலிதா பல்கலைக்கழக இணைப்புக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 63 அதிமுக எம்எல்ஏக்கள் மீது திருவல்லிக்கேணி போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ளது.


* தமிழ்நாட்டில் டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விலை இன்று முதல் உயருகிறது. 10 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை உயர்த்தப்படும் என்று டாஸ்மாக் அறிவித்துள்ளது.


* தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 1512 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 26,14,872ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 189 பேரும், கோவையில் 173 பேரும், ஈரோட்டில் 141 பேரும்,  தஞ்சாவூரில் 98 பேரும்,  செங்கல்பட்டில் 95 பேரும், நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.


*  தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் தடுப்பூசி பரிசோதனை தொடங்கியுள்ளது. கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியின் இரண்டு தவணை டோஸ்களையும் செலுத்திக்கொண்டவர்கள் இந்த பரிசோதனையில் பங்கேற்றுள்ளனர். 


* உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர், தென்னாப்பிரிக்காவின் டேல் ஸ்டெயின்(Dale Steyn ). 38 வயதான டேல் ஸ்டெயின் தென்னாப்பிரிக்கா அணி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக வலம் வந்தவர். இந்த நிலையில், 38 வயதான டேல் ஸ்டெயின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.


* கே.டி.ராகவன் விவகாரத்தில் வெளியிட்ட அறிக்கைக்கும், யூடியூபரின் வீடியோவிலும் எந்த வித்தியாசமும், மாற்று கருத்தும் கிடையாது - தமிழக பாஜக அண்ணாமலை பேட்டி.


* வீட்டில் உபயோகிக்கும் சமையல் எரிவாயு விலை ரூ.25 அதிகரித்துள்ளது.14 கிலோ சமையல் எரிவாயுவின் விலை  25 ரூபாய் அதிகரித்து ரூ.900-க்கு இன்று முதல் விற்கப்படுகிறது. அதே சமயம், வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் ரூ. 75 உயர்ந்து, 1831.50 ரூபாய்க்கு இன்று முதல் விற்கப்படுகிறது.  


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற