தமிழ்நாடு:


* மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அனல் வீசிய நிலையில் அதிமுக செயற்குழு இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் புயலை கிளப்ப திட்டம் தீட்டியுள்ளதாக கூறப்படுகிறது.


* அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா நீக்கம். கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செய்யப்பட்டதால் நீக்கம் என ஓபிஎஸ் - இபிஎஸ் அறிக்கை


* தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு டிசம்பர் 15ஆம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஆந்திரா, கர்நாடகாவைத் தொடர்ந்து தற்போது கேரளாவுக்கும் பொதுப்போக்குவரத்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 


* 3 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட ஐந்து காவல் துறை அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.  செங்கல்பட்டு எஸ்பியாக அரவிந்தன் நியமனமிக்கப்பட்டுள்ளார்.


* தெற்கு அந்தமான் கடற்பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறும் எனவும், அடுத்த 24 மணி நேரத்தில் இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என்று சென்னை வானிலை மையம்  தெரிவித்துள்ளது. 


இந்தியா:


* எதிர்க்கட்சிகளின் தொடர் அமலியால் மாநிலங்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


* ஓமைக்ரான் அச்சுறுத்தல் எதிரொலியால் கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


* உச்ச நீதிமன்றத்தில்  நடந்த விஜய் மல்லையா வழக்கில் வரும் 2022ஆம் ஆண்டு, ஜனவரி 18 அன்று தொழிலதிபர் விஜய் மல்லையா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.


* பாலியல் தொழிலாளிகள் மறுவாழ்வு தொடர்பான மசோதா ஒன்றை நடப்பு குளிர்காலக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. 


உலகம் :


* ஓமைக்ரான் வைரஸ் குறித்து தீவிரமாக ஆய்வு செய்து வரும் உலக சுகாதார அமைப்பு.


* அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள பள்ளியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர். 


* அமெரிக்காவில் இரண்டாவது மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவருக்கு 33ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.


விளையாட்டு:


* சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் தோனி, ஜடேஜா, மொயின் அலி, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.


* பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் பிசிசிஐக்கு புகார் அளித்துள்ளனர். அதில், கேஎல் ராகுல் மற்றும் ரஷித் கானை ஏலம் நடப்பதற்கு முன்பே எங்கள் அணியிலிருந்து விலகி புதிய லக்னோ அணிக்கு சென்றதாக புகார் அளித்துள்ளனர்.