Just In

Villupuram DMK: பொன்முடிக்கு நோ ! ஆர்டர் போட்ட லட்சுமணன்.. ஆடிப்போன எம்.ஆர்.கே

NITI Aayog Meet: மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் - ஆப்ரேஷன் சிந்தூர் விவகாரம் வெடிக்குமா? ஸ்டாலின் திட்டம் என்ன?

Palani Bus Driver Heart Attack CCTV |ஓடும் பேருந்தில் ஓட்டுநர் மரணம்!நொடிப்பொழுதில் தப்பிய பயணிகள்

Ponmudi vs Lakshmanan |பொன்முடிக்கு NO !ORDER போட்ட லட்சுமணன்ஆடிப்போன M.R.K

விஜய்யின் ஆனஸ்ட்ராஜ்.. தவெகவில் இனி இவர்தான் எல்லாம்.. யார் இந்த அருண் ராஜ் ஐஆர்எஸ்?
சென்னை டூ திருப்பதி டூ திருச்செந்தூர்.. புதிய அதிநவீன ஏசி பேருந்துகள் இயக்கம்.. வாவ்
News Headlines : சென்னையில் விடிய, விடிய மழை... குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி - இன்றைய தலைப்புச்செய்திகள்
தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
Continues below advertisement

தலைப்புச்செய்திகள்
Continues below advertisement
- தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு கனமழை தொடரும் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
- சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் விடிய, விடிய தொடர்ந்து கனமழை - பொதுமக்கள் மிகுந்த அவதி
- வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு – கடலுக்கு சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்ப அறிவுறுத்தல்
- மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க தாழ்வான பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் – அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
- தமிழ்நாடு முழுவதும் பெய்து வரும் கனமழையால் பல்வேறு மாவட்டங்களிலும் ஆயிரக்கணக்கான பயிர்கள் நீரில் மூழ்கியது.
- தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வைகை ஆற்றில் வௌ்ளப்பெருக்கு – தேனி வராக நதியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இருவரில் ஒருவர் சடலமாக மீட்பு
- தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைவு – மாநிலத்தின் தலைநகர் சென்னையில் தொடர்ந்து 100க்கும் அதிகமான அளவில் பாதிப்பு
- முல்லைப் பெரியாறில் பேபி அணைக்கு கீழ் உள்ள 15 மரங்களை வெட்ட தமிழக அரசுக்கு கேரள அரசு அனுமதி
- மரங்களை வெட்ட அனுமதி அளித்த முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி
- முல்லைப்பெரியாறு அணையை 14 முறை ஆய்வு செய்துள்ளேன் : அமைச்சர் துரைமுருகனின் பேட்டி உண்மைக்கு புறம்பானது – ஓ.பன்னீர்செல்வம்
- சென்னையில் கடந்த 5 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு நடப்பாண்டில் அதிகரித்த பட்டாசு குப்பைகள்
- சென்னையில் நடப்பாண்டில் மட்டும் 182 டன் பட்டாசு குப்பைகளை அகற்றியது சென்னை மாநகராட்சி
- மத்திய அரசுப்பணியில் இருந்து திரும்பிய அமுதா ஐ.ஏ.எஸ். தமிழக ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளராக நியமனம்
- டெல்லியில் இன்று பா.ஜ.க. செயற்குழு கூட்டம் – பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு
- மகாராஷ்ட்ராவில் உள்ள அரசு மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து – ஐ.சி.யூ. வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த 11 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு
- மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் எரிபொருள் லாரி வெடித்து சிதறியது : 99 பேர் உயிரிழப்பு
- டி20 உலககோப்பை குரூப் 1 பிரிவில் இங்கிலாந்தை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா : ரன்ரேட் அடிப்படையில் ஆஸ்திரேலியா முன்னேற்றம்
- டி20 உலககோப்பையில் குரூப் 2 பிரிவில் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும் முக்கியமான ஆட்டத்தில் நியூசிலாந்தும் – ஆப்கானிஸ்தானும் இன்று மோதுகின்றன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.