சமீப காலங்களாக ரயில் நிலையங்களில் பயணகளின் அலட்சியம் மிகவும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பலர் தங்களை அறியாமல் ஆபத்தான சூழலில் சிக்கிவிடுகின்றனர். அப்படி சிக்கும் பலரை ரயில்வே காவல்துறையினர் உள்பட பலரும் முயன்றும் காப்பாற்றும் செய்திகள் அடிக்கடி வந்த வண்ணம் உள்ளன. அந்தவகையில் தற்போது மேலும் ஒரு ரயில் நிலை செய்தி ஒன்று வந்துள்ளது. இம்முறை தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த பெண் ஒருவரை காவலர் காப்பாற்றும் காட்சி அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
மும்பையில் உள்ள ஒரு புறநகர் ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் தவறுதலாக ரயில் வருவது தெரியாமல் ரயில் தண்டவளத்தை கடக்க முயன்றுள்ளார். அந்தக் காட்சியை முன்பாகவே சிசிடிவி காட்சியில் பார்த்த காவலர் ஒருவர் உடனடியாக ரயில் ஓட்டுநருக்கு சிக்னல் கொடுத்து ரயிலை சரியான நேரத்தில் நிறுத்த வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் உடனே தண்டவாளத்திற்கு விரைந்து அந்த பெண்ணையும் காப்பாற்றி பத்திரமாக திருப்பி அனுப்பியுள்ளதாக தெரிகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக மும்பை ரயில்வே காவல்துறை ஆணையர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார்.
அதில், "மும்பை வால்சா சாலையிலுள்ள காவல் நிலையத்தில் பணிபுரியும் கான்ஸ்டபிள் நாயக் துரிதமாக செயல்பட்டு பெண் ஒருவரை மரணத்தில் இருந்து காப்பாற்றியுள்ளார். தண்டவளத்தில் பெண் நிற்பதை பார்த்த அவர் ஓட்டுநருக்கு சரியாக சிக்னல் கொடுத்து ரயிலை நிறுத்த வைத்துள்ளார்.அதன்பின்னர் அந்த பெண்ணை காப்பாற்றியுள்ளார். அவருக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படுகிறது" எனப் பதிவிட்டுள்ளார்.
ஆபத்தான காலத்தில் தன்னுடைய புத்தியை சரியாக பயன்படுத்தி பெண்ணை காப்பாற்றிய காவலருக்கு பலரும் தங்களுடைய பாராட்டை தெரிவித்து வருகின்றனர். அத்துடன் பலரும் ரயில் நிலையங்களில் செல்லும் போது நாம் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது என்றும் பதிவிட்டு வருகின்றனர். ரயில் நிலையங்கள் நாம் சிறிய தவறு கூட நம்முடைய உயிரை பறிக்கும் வகையில் அமைந்துவிடும் என்பதற்கு இந்த வீடியோ ஒரு நல்ல எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
மேலும் படிக்க: விபத்தில் சிக்கிய நடிகர் சாய் தரம் தேஜை காப்பாற்றியது இவர்தான்.. நன்றி சொல்லும் ரசிகர்கள்!