ஹரியானா மாநிலம் பிவானி பகுதியில் அமைந்துள்ள கல்குவாரி ஒன்றில் மிகவும் மோசமான நிலச்சரிவு எற்பட்டுள்ளது. இதனையடுத்து, மீட்பு பணிகளை அம்மாநில அரசு துரிதப்படுத்தியுள்ளது. ஏராளமானோர் இந்த நிலச்சரிவில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
கல்குவாரியில் ஏற்பட்ட நிலச்சரிவு குறித்து வருத்தம் தெரிவித்த அம்மாநில முதல்வர் மனோகர் லால், "
“பிவானி பகுதியில் ஏற்பட்ட எதிர்பாராத நிலச்சரிவு மிகவும் வருத்தம் அளிக்கிறது. மீட்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. நிலச்சரிவில் சிக்கிக் கொண்டுள்ளவர்களை மீட்கும் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்தார்.
ஆனால், மீட்புப் பணிகளில் மாவட்ட நிர்வாகம் அலட்சியம் காட்டியதாக டோஷம் சட்டமன்ரா உறுப்பினர் கிரண் சவுத்திரி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து, அவர் ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் , " நிலச்சரிவில் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்பது என்ற தகவல் இதுவரை இல்லை. ஆனால், நிலச்சரிவில் சிலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மாவட்ட நிர்வாகத்தின் மெத்தனம் காரணமாக நிலச்சரிவில் சிக்கிக் கொண்டுள்ளவர்களை மீட்கும் பணிகள் தாமதமாகின. விதிமுறைகளை மீறி, ஹரியானா மாநிலத்தில் சுரங்கம் தோண்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தேசிய பசுமை தீர்ப்பாயம் ஏற்கனவே பிவாணி பகுதியில் சுரங்கம் தோண்டும் பணிகளுக்குத் தடை விதித்திருந்தது" என்று தெரிவித்தார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்