பிரதமர் வேண்டுகோள்:


இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தையொட்டி, ஆகஸ்ட் 13-ம் தேதி முதல் ஆகஸ்ட் 15 வரை, அனைவரும் வீடுகள்தோறும் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் எனவும், சமூக வலைதளங்களின் முகப்பு பக்கத்தில் தேசிய கொடியை பதிவேற்றம் செய்யுமாறும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். 


இந்நிலையில் மாலை 6 மணிக்கு மேல் தேசிய கொடியை ஏற்றலாம் என்றும், கதர் ஆடை மட்டுமன்றி, இதர துணிகளிலும் தேசிய கொடியை தயாரிக்கலாம் என விதிகளில் மாற்றம் கொண்ட்டு வரப்பட்டது.


இந்நிலையில் நாட்டில் உள்ள பல பிரபலங்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் தேசிய கொடி தொடர்பான இயக்கத்தை ஹர் கர் திரங்கா(har ghar tiranga) மேற்கொண்டுள்ளனர்.


ரஜினிகாந்த்:


75வது சுதந்திர தினத்தையொட்டி, சென்னை போயஸ் கார்டனில் வசிக்கும் நடிகர் ரஜினிகாந்த், வீட்டில்  தேசிய கொடியை ஏற்றியுள்ளார். மேலும் சமூக வலைதளத்தின் முகப்பு பக்கத்திலும், தேசிய கொடியை பதிவேற்றம் செய்துள்ளார்.






மேலும் சாதி, மதம் என எந்த வேறுபாடின்றி வீட்டின் முன் தேசிய கொடியை ஏற்றுவோம் என நடிகர் தெரிவித்துள்ளார்


தோனி:




இந்தியா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தனது இன்ஸ்டாகிராம் முகப்பு பக்கத்தில் தேசிய கொடியை மாற்றம் செய்துள்ளார். மேலும் இந்தியனாக இருப்பது அதிர்ஷ்டம் என தெரிவித்துள்ளார்.


நிதின் கட்காரி:




ஒற்றுமை என்ற நூலில் அனைவரையும் இணைக்கும் மூவர்ணக் கொடி, ஒவ்வொரு இந்தியனின் பெருமை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தொடங்கி வைத்த HarGharTiranga பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, நாக்பூரில் உள்ள இல்லத்தில் மூவர்ணக் கொடியை நிதின் கட்காரி ஏற்றினார்.


கேரள நடிகர் மோகன்லால்:


கேரள நடிகர் மோகன்லால், தனது வீட்டில் தேசிய கொடியை ஏற்றியுள்ளார். இது குறித்து தெரிவித்துள்ளதாவது, வீடுதோறும் தேசிய கொடியை ஏற்றும் இயக்கமானது நாட்டு பற்றை அதிகப்படுத்தும் என தெரிவித்துள்ளார்.






இந்தோ திபெத்திய எல்லை காவல்துறையினர்


இந்திய- சீனா எல்லை எல்லைப்பகுதியில், இந்தோ திபெத்திய எல்லை காவல்துறையினர் 3,488 கி.மீ உயரத்தில் இந்திய தேசிய கொடியை ஏற்றினர்.






ஓபிஎஸ்:


முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தனது முகப்பு பக்கத்தில் தேசிய கொடியை வைத்துள்ளார்.




இபிஎஸ்


எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தனது வீட்டில் தேசிய கொடியை ஏற்றினார்.






 


விஜய்:


நடிகர் விஜய் வீட்டில் பறக்கும் தேசிய கொடி




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண