வதோதரா முனிசிபல் கார்ப்பரேஷனின் விஎம்சி ஹிதேந்திர படேல், கடந்த வியாழக்கிழமை, நகரின் தெருக் கடைகள் மற்றும் உணவகங்களில் விற்கப்படும் அனைத்து அசைவ உணவுகளையும் பொதுக் காட்சியில் இருந்து அகற்றுமாறு வாய்மொழி உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து படேல் கூறுகையில், “அனைத்து உணவுக் கடைகளும், குறிப்பாக மீன், இறைச்சி மற்றும் முட்டை போன்ற அசைவ உணவுகளை விற்பனை செய்பவர்கள், சுகாதாரக் காரணங்களுக்காக உணவு நன்கு மூடப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று நான் அறிவுறுத்தினேன். போக்குவரத்து சாலைகளில் நெரிசலை ஏற்படுத்தும் என்பதால், அனைத்து அசைவ உணவுகளையும் பொதுக்காட்சியில் இருந்து அகற்றுமாறு கூறினேன். இது மத உணர்வுகளுடன் தொடர்புடையது என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அசைவ உணவுகளை முழுமையாகக் காட்சிக்கு வைத்து விற்கும் பழக்கம் பல ஆண்டுகளாக இருந்து வந்தாலும் அதைச் சரிசெய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. அசைவ உணவைப் பார்க்கக் கூடாது. இந்த அறிவுறுத்தல் இறைச்சி மற்றும் முட்டைகளை விற்கும் கடைகளுக்கும் பொருந்தும். விற்பனையாளர்கள் 15 நாட்களுக்குள் அறிவுறுத்தல்களுக்கு இணங்குவதை உறுதிசெய்ய வேண்டும். இல்லையென்றால் அதிக அபராதம் விதிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று கூறினார்.
இருப்பினும், நகராட்சி ஆணையர் ஷாலினி அகர்வால் மற்றும் நகரத்தில் உள்ள நிர்வாக வார்டுகளின் அதிகாரிகள் இந்த முடிவு குறித்து தங்களுக்குத் தெரியாது என்று தெரிவித்தனர். ஷாலினிஅகர்வால் தனக்கு எந்த அறிவுறுத்தலும் வரவில்லை என்று கூறினார்.
ராஜ்கோட் மேயர் பிரதீப் தாவ் கூறுகையில், “முக்கிய சாலைகளில் உள்ள கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அசைவ உணவுகளை விற்கும் கடைகள் மக்களுக்கும், வாகனப் போக்குவரத்திற்கு இடையூறுகளை ஏற்படுத்துகின்றன, மேலும் இந்து மதத்தைப் பின்பற்றுபவர்களின் மத உணர்வுகளையும் புண்படுத்துகின்றன” என்று கூறினார்.
மேலும் செய்திகள் படிக்க: Watch Video | சாக்லேட் ப்ரவுனியும், பீடாவும்.. கலக்கும் வீடியோ.. பிரதமர் மோடி பிறந்த மாநிலத்தில் வைரலாகும் உணவு
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்