குஜாராத் மாநில ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் வெறும் ஒரு வாக்கை மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்துள்ளார். வேட்பாளர் சந்தோஷின் குடும்பத்தில் மட்டும் மொத்த 12 பேர் வாக்கலாளர்களாக. அந்த ஒரு வாக்கும் அவர் தனக்காக போட்டுக் கொண்டது. தேர்தலில், தனது குடும்பத்தினர் கூட யாரும் வாக்கு செலுத்தவில்லை என்ற தகவல் அவரை மேலும் மனதுடைய செய்துள்ளது.
TN Local Body Election: ஒத்த ஓட்டு வாங்கிய பாஜக கார்த்தி... தெறிக்கவிடும் மீம்ஸ்!!
குஜாரத் மாநிலத்தில், 8,600 கிராம ஊராட்சி இடங்களுக்கான தேர்தல் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், 40,000க்கும் அதிகமான கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். நேற்று, இரவு முதல் வாக்கு எண்ணிக்கை பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சார்வாலா (Chharwala) கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு சந்தோஷ் போட்டியிட்டடார். அதன் முடிவுகள், இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், வேட்பாளர் சந்தோஷ் வெறும் ஒரு வாக்கு பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
முன்னதாக, கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம், குருடம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட 9 ஆவது வார்டுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜகவைச் சேர்ந்த கார்த்திக் ஒரு வாக்கு மட்டும் பெற்றார். கார்த்திக் உள்பட அவர் குடும்பத்தில் மொத்தம் 6 பேர் உள்ளனர். அவர் சார்ந்த கட்சியினர் வாக்களிக்கவில்லை என்றாலும், அவரது குடும்பத்தினராவது வாக்களித்திருந்தாலே இதைவிட அதிகம் வாக்கு வாங்கியிருக்க முடியும். குடும்பத்தினர் கூட அவரை ஆதரிக்கவில்லை. அந்த ஒரு ஓட்டும் அவர் போட்டது தானா? அல்லது வேறு யாரேனும் போட்டனரா என சமூக வலைதளங்களில் கிண்டல் செய்யப்பட்டு வந்தது.
One Vote BJP Candidate: ஒரு ஓட்டே பெருசுதாங்க! பாஜக வேட்பாளர் அதிரடி
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்