இன்று காலை 8 மணிக்கு குஜராத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது, அதற்கான இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. 


இரண்டாம் கட்டத் தேர்தல்:


 93 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது, தேர்தல் களத்தில் 883 வேட்பாளர்கள் உள்ளனர். அகமதாபாத், வடோதரா போன்ற குஜராத்தின் வட மற்றும் மத்திய மாவட்டங்களில் தேர்தல் நடத்தப்படுகிறது. 2 கோடி 54 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர், 1லட்சம் பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  


இதற்காக 26,409 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது,   36,000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. 


26 ஆயிரம் வாக்குச்சாவடிகள்:


குஜராத் சட்டப்பேரவை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் டிசம்பர் 1 ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் டிசம்பர் 5 ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில்  மொத்தம் உள்ள 182 சட்டப்பேரவை தொகுதிகளில் முதற்கட்டமான தேர்தல் 89 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமான தேர்தல் 93 தொகுதிகளுக்கும் நடைபெறுகிறது. முதற்கட்டத் தேர்தல் டிசம்பர் 1 ம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில் 63 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.


குஜராத்தில் உள்ள அகமதாபாத், காந்திநகர் போன்ற 14 மாவட்டங்களில் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 833 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்களிப்பதற்கு 26 ஆயிரத்து 409 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 36 ஆயிரம் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகிறது.


வாக்களிக்கும் பிரதமர் மோடி:


குஜராத்தில் மொத்தமாக 4 கோடியே 91 லட்சத்து 17 ஆயிரத்து 708  வாக்களர்கள் உள்ள நிலையில் , இரண்டாம் தேர்தலில் 2 கோடியே 54 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லும் பணிகள் நடைபெற்று வருகிறது.  மொத்தமாக 1 லட்சத்து 13 ஆயிரம் பணியாளர்கள், அதிகாரிகள் இத்தேர்தல் பணியில் ஈடுபடவுள்ளனர்.


இரண்டாம் கட்ட தேர்தலை பொருத்தவரை வட மற்றும் மத்திய குஜராத்தில் உள்ள  வதோதரா, காந்திநகர், அகமதாபாத் உள்ளிட்ட மாவட்டங்களில் தேர்தல் நடைபெறுகிறது. இந்தியாவே உற்றுநோக்கும் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. பிரதமர் மோடி இன்று தனது சபர்மதி தொகுதியில் உள்ள ஆமதாபாத்தில் உள்ள பள்ளியில் நேரில் சென்று வாக்களிக்க உள்ளார்.


பலத்த எதிர்பார்ப்பு:


கிட்டத்தட்ட 25ஆண்டுகளுக்கு மேலாக பாஜக ஆட்சியில் உள்ள நிலையில், ஏழாவது முறையாக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற வரலாறு படைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. 1995ஆம் ஆண்டுக்கு பிறகு, காங்கிரஸ் கட்சியால் குஜராத்தில் ஆட்சி அமைக்கவே முடியவில்லை. ஆனால், 2017ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கடும் போட்டிக்கு இடையே, பாஜக 99 இடங்களையும், பிரதான எதிர்கட்சியான காங்கிரஸ் 77 இடங்களையும் கைப்பற்றியது. பல ஆண்டுகளாகவே, கிராமப்புரங்களை பொறுத்தவரை, காங்கிரஸ் கட்சி வலுவாக காணப்படுகிறது. 


ஆளும் பாஜக, பிரதான எதிர்கட்சியான காங்கிரஸ், குஜராத் அரசியலில் புதிதாக குதித்துள்ள ஆம் ஆத்மி ஆகியவை ஒருவருக்கொருவர் கடுமையாக விமர்சித்து தாக்கி கொண்டனர். இருப்பினும், கடந்த தேர்தலை காட்டிலும், இந்த தேர்தலில் பிரச்சாரம் சற்று மந்தமாகவே இருந்தது. 


டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் கடைசி நாளான நேற்று முன்தினம் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.