கிரேட்டர் நொய்டாவில் ஜார்ச்சா பகுதியில் அமைந்துள்ள  கிராமத்தில் பாலியல் குற்றச்செயலில் ஈடுபடுபட்டதாக 30 வயது மதிப்புமிக்க நபர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


நொய்டா ஜார்ச்சா பகுதியில் சைன்தலி கிராமத்தில் 11ம் வகுப்பு    படிக்கும் சிறுமிக்கு, மற்றொரு பகுதியைச் சேர்ந்த 30 வயது மதிப்புமிக்க நபர் ஒருவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார்.   


   


சாலைகளில் செல்லலும் போது வழிமறித்து பேசுவது, மிரட்டுவது, கேலி செய்வது, தொலைபேசி எண்ணை பரிமாறுவது, துப்பாக்கியால் சுட்டுவிடுவேன் என மிரட்டுவது, வீட்டிற்கு  ஆள் அனுப்புவது போன்ற பாலியல் ரீதியான வன்கொடுமைகளைக்  கொடுத்து வந்ததாக காவல்துரை அதிகாரிகள் தெரிவித்தனர்.        


இந்த கொடுமைகளை சகித்துக் கொள்ள முடியாமல், தங்கள் குழந்தை பள்ளிக்கு செல்வதையே தவிர்த்துவிட்டதாக பெற்றோர்கள் வேதனைபட தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக எதிரி தன்னை துன்புறுத்தி வருவதாகப் பாதிக்கப்பட்ட சிறிமி காவல்துறையிடம் ஒப்புதல் அளித்துள்ளார். பள்ளிக்குச் செல்லும் வழியில், நடுரோட்டில் மடக்கி பேசுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். தன்னை நிராகரித்தால் மோசமான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தார். வாங்க மறுத்தாலும், தொலைபேசி எண்ணை  காகிதத்தில் எழுதி வலுக்கட்டாயமாக வாங்க கட்டாயப்படுத்துவார். முன்பின் தெரியாத நபர்களை எங்கள் வீட்டிற்கு அனுப்பி தகவல்கள் அனுப்புவார் என்று அச்சிறுமி தான் அனுபவித்த வன்கொடுமைகளை காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.                 


சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து கூறுகையில்“ இந்த துன்புறுத்தல்கள் காரணமாக எங்கள் மகள், பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே பத்தாம் வகுப்பை முடித்தார். ராணுவ ஆட்சேர்ப்புக்கு தயாராகி கொண்டிருந்தார்.தற்போது, ஓட்டப் பயிற்சிக்குக் கூட தயங்குகிறார். எதிரியின் வீட்டிற்கு நேரடியாக சென்று எனது மனைவியும், தாயாரும் பேசிப் பார்த்தனர். அவர்களாலும் அவனை கண்டிக்க முடியவில்லை. எனவே, தான் காவல்துறைக்கு விசயத்தைக் கொண்டு வந்தோம்" என்று தெரிவித்தனர்.             


இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 354, மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறையின் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. தலைமறைவாகியுள்ள குற்றவாளியை தேடும் பணியையும் முடிக்கிவிட்டுள்ளது.        


பிரிவு 354-ன் கீழ்,  ஒரு பெண்ணை மானபங்கப்படுத்தும் நோக்கத்துடன், அல்லது தான் செய்யும் செயல் பெண்ணின் கௌரவத்துக்கு இழுக்கு ஏற்படுத்தும் என்று தெரிந்து, குற்றத்தன்மை கொண்ட தாக்குதலை பெண் மீது தொடுக்கும் ஒருவர் ஓராண்டுக்குக் குறையாத ஐந்து ஆண்டுகள் வரை நீளக்கூடிய சிறைத்தண்டனையையுடன் அபராதமும் செலுத்தும்படி தண்டிக்கப்படலாம்.


பிரிவு 506ம் கீழ், பெண்ணை மானபங்கப்படுத்தும் அத்துமீறல்களுக்கு  ஓராண்டுக்குக் குறையாத ஏழு ஆண்டுகள் வரை நீளக்கூடிய சிறைத்தண்டனையையுடன் அபராதமும் செலுத்தும்படி தண்டிக்கப்படலாம்.      


இந்திய குற்ற ஆவண மையத் (NCRB) தரவுகளின்படி/விவரங்களின் படி, நம் நாட்டில் பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள் (VAW) ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.  தொற்று நோய் இந்த பிரச்சினை உருமாறியுள்ளது. ஆனால் NCRB 2010 -2012 க்கான விவரங்களை ஆய்வு செய்தால், இந்திய குற்றவியல் சட்டம் 1860, படி பெண்களுக்கெதிரான பல்வேறு குற்றங்களுக்காக தண்டனை அளிக்கப்பட்ட விகிதங்கள் குறைந்துள்ளது தெரியவருகிறது. ( Conviction Rate-வன்புணர்ச்சிக் குற்றத்திற்கு தண்டிக்கப்பட்டது 2010 இன் 26.6% லிருந்து 2012 இல் 24.2% ஆகவும், பாலியல் தொந்தரவிற்கு 29.7% லிருந்து 24.0% ஆகவும், பெண்களைக் கேலி செய்தலுக்கு 52.8% லிருந்து 36.9% ஆகவும் குறைந்துள்ளது).  


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண