மருத்துவம் சாராத காரணங்களுக்காக குறைந்தது ஒரு தடுப்பூசிக் டோஸ்கள் கூட செலுத்துக் கொள்ளத அரசு ஊழியர்கள் செப்டம்பர் 15ம் தேதிக்குப் பிறகு கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்படுவார்கள் என பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது.
உலகின் பல நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும், மகாராஷ்டிரா மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை கட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை. இருப்பினும், வாராந்திர தொற்று உறுதிப்படுத்தல் விகிதம் தொடர்ந்து 10-வது வாரமாக 3 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தது.
இந்நிலையில், பஞ்சாப் மாநில முதல்வர் அமரிந்தர் சிங் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், " மாநில மக்கள் ஒவ்வொருவரின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மெத்தனம் காரணமாக தடுப்பூசி போட்டுக் கொள்ள தயங்குபவர்கள் காரணமாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட மக்கள் பாதிக்கப்படக் கூடாது" என்று தெரிவிக்கப்பட்டது.
அனைத்து அரசு ஊழியர்களுக்கும் முன்னிரிமை அளித்து தடுப்பூசி போடப்பட்டது. இருந்தபோதும், தடுப்பூசி போட்டுக் கொள்ள அரசு ஊழியர்கள் சிலர் முன்வரவில்லை. எனவே, இதுபோன்ற தீர்க்கமான நடவடிக்கைகள் தேவை என்று அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப்பில் சமீபத்திய நிலவரப்படி, 1 கோடியே 55 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவர்களில் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் 12,039,477 பேர், 3,826,637 பேர், 2வது டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். அதாவது, மாநிலத்தில் குறைந்தது 53% பேர் குறைந்தது ஒரு தடிப்பூசி டோஸ்களை போட்டுக் கொண்டுள்ளனர். தேசிய அளவில் இந்த எண்ணிக்கை 59 சதவிகிதமாக உள்ளது.
கட்டாய தடுப்பூசி : மணிப்பூர், மிசோரம், நாகலாந்து ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தப்படியாக கட்டாய தடுப்பூசியை நிர்பந்திக்கும் மாநிலமாக பஞ்சாப் உள்ளது. இருப்பினும், கட்டாய தடுப்பூசி தனிமனித சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள உயர்நீதிமன்றங்கள் கருத்து தெரிவித்துள்ளன.
முன்னதாக, அரசு ஊழியர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் இல்லயேல் 15 நாட்கள் இடைவெளியில் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை சமர்பிக்க வேண்டும் என்ற நாகாலாந்து அரசின் சுற்றறிக்கையை அசாம் உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. அதேபோன்று, மிசோரம், மணிப்பூர் மாநில அரசுகளின் கட்டாய தடுப்பூசி திட்டத்தை அசாம் உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
இருப்பினும், M Karpagam v. Commissionarate for the welfare of Differently-Abled and anr வழக்கில், கொரோனா தொற்று நேரத்தில் மக்கள் நலனை கருத்தில் கொண்டு " தடுப்பூசியை வேண்டாம் என்று சொல்வது (Right To Refuse)" மக்களின் அடிப்படை உரிமையாக கருத முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
மேலும், வாசிக்க:
யோக்கியன்னு நெனச்சா... இவ்வளவு பெரிய டூபாக்கூரா நீ... இங்கி., போர்டின் தில்லாலங்கடி அம்பலம்!