இந்தியாவில் உள்ள 20 மாநிலங்களில் உள்ள 76 நிறுவனங்களில் இந்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு இயக்குநரகம் (டி.சி.ஜி.ஐ) ஆய்வு செய்ததைத் தொடர்ந்து போலி மருந்துகள் தயாரித்ததற்காக 18 மருந்து நிறுவனங்களின் உரிமங்களை மத்திய அரசு ரத்து செய்தது என செய்தி வெளியாகியுள்ளது. 


போலி மருந்து தயாரிப்பு:


போலி மருந்துகள் தயாரிப்பு தொடர்பாக நாடு முழுவதும் உள்ள மருந்து நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் நோக்கில் 15 நாட்கள் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.






கலப்பட மருந்துகள் உற்பத்தியை தடுத்து நிறுத்தி, தரமான மருந்துகளை விற்பனை செய்யும் நோக்கில் மத்திய, மாநில அரசுகளின் ஆய்வு குழு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது. 


18 நிறுவனங்களின் உரிமம் ரத்து:


மத்திய-மாநில அரசு அதிகாரிகள் நடத்திய கூட்ட ஆய்வில், போலியான மற்றும் தரம் குறைந்த மருந்துகள் தயாரித்ததாக,18 மருந்து நிறுவனங்களின் உரிமங்களை மத்திய அரசு ரத்து செய்தது என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 26 நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.


பெரும்பாலான நிறுவனங்கள் இமாச்சல பிரதேசம், ம.பி., உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் இருந்து இயக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.






இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மற்றும் சளி மருந்துகளை உட்கொண்டதால் குழந்தைகள் இறந்ததாக உஸ்பெகிஸ்தான் அறிவித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.


"உஸ்பெகிஸ்தான் சுகாதார அமைச்சகத்தின் தேசிய தரக் கட்டுப்பாட்டு ஆய்வகங்களால் மேற்கொள்ளப்பட்ட மரியன் பயோடெக்கின் ஆம்ப்ரோனால் சிரப் மற்றும் டிஓகே -1 மேக்ஸ் சிரப் ஆகிய இரண்டு மாதிரிகளின் ஆய்வக பகுப்பாய்வில், ஏற்றுக்கொள்ள முடியாத அளவு டைஹைலீன் கிளைகோல் மற்றும் அல்லது எத்திலீன் கிளைகோல் அசுத்தங்களைக் கொண்டிருப்பதைக் கண்டறிந்தது" என்று உலக சுகாதார அமைப்பு ஒரு அறிக்கையில் தெரிவித்தது.


மருந்து தயாரிப்பு:


அக்டோபர் 2022 இல், மெய்டன் பார்மசூட்டிகல்ஸ் தயாரித்த நான்கு இருமல் சிரப் மாதிரிகளில் எத்திலீன் கிளைகோல் மற்றும் டைதிலீன் கிளைகோல் ஆகியவை நச்சு அசுத்தங்களாக இருப்பது குறித்து உலக சுகாதார அமைப்பு கவலைகளை எழுப்பியது.


2022 டிசம்பரில், மெய்டன் பார்மசூட்டிகல்ஸின் இருமல் சிரப் மாதிரிகள் தரமானவை என்று கண்டறியப்பட்டதாக இந்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.


இதையடுத்து, இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் உள்ள மருந்து நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆய்வில் தரம் குறைவான மருந்துகள் தயாரித்ததாக 8 மருந்து நிறுவனங்களின் உரிமங்களை மத்திய அரசு ரத்து செய்ததாக ஏ.என்.ஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டது. 


Also Read: EPS Profile: கிளைச்செயலாளர் டூ பொதுச்செயலாளர்: எடப்பாடியில் ஒரு பழனிசாமி - கடந்து வந்த பாதை!


Also Read: ’குடும்பதோடு டூர் போறீங்களா?’ - அட்டகாசமான பயண அனுபவத்தை தரும் பரளிக்காடு சூழல் சுற்றுலா