மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி (Bhagat Singh Koshyari) தனது சர்ச்சைக்குரிய கருத்திற்கு எதிர்ப்பு எழுந்ததையோட்டி, தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாக கூறி மன்னிப்பு கோரியுள்ளார்.


கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, “மாநிலத்தில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்களை நீக்கிவிட்டால், ("Gujaratis-Rajasthanis"), குறிப்பாக மும்பை மற்றும் தானே நகரங்களில் இருந்து வெளியேற்றிவிட்டால், மகாராஷ்டிராவில் பணமே இருந்திருக்காது; இருக்காது. நாட்டின் வர்த்தக தலைநகராக மும்பை இருந்திருக்க முடியாது. குஜராத், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எங்கு சென்றாலும் வர்த்தகம் செய்வதோடு, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட சேவைகளையும் செய்கிறார்கள்.” என்று அவர் கூறியிருந்தார். 


இதற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்தும் எதிர்ப்பு குரல் எழுந்தன. மகாராஷ்டிராவில் வாழும் மக்களை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்திருப்பதாக பகத்சிங் கோஷ்யாரிக்கு கண்டனம் எழுந்தது. 


இந்த சர்ச்சைக்குரிய கருத்திற்கு ஏன்நாத் ஷிண்டே ( Eknath Shinde) ,” அது அவரின் தனிப்பட்ட கருத்து, அதை நாங்கள் வரவேற்கவில்லை.” என்று தெரிவித்திருந்தார். ஷிண்டேவின் கருத்தை வரவேற்பதாக துணை முதலமைச்சர் தேவிந்திர ஃபட்னாவிஸ்  (Devendra Fadnavis ) தெரிவித்திருந்தார். 


காங்கிரஸ் மற்றும் ஷிவ் சேனா கட்சியைச் சேர்ந்தவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மேலும், இதற்கு ஆளுநர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது. 


சிவ சேனா (Shiv Sena ) கட்சியின் தலைவர் உத்தவ் தாக்ரே ( Uddhav Thackeray ), இந்துக்கள் ஒற்றுமையோடு வாழ்வதை உருகுலைக்கும் வகையில் ஆளுநர் பேசியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், ஆளுநர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார். 


 






 


ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி மன்னிப்பு: 


இந்நிலையில், ஆளுநர் தனது கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாகவும், மன்னிப்பு கேட்பதாகவும் தெரிவித்தார். இது குறித்து ஆளுநர் மாநிலை வெளியிடுள்ள அறிக்கையில், ஆளுநர் நிகழ்ச்சியில் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. நான் குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநில மக்கள் மும்பையின் முன்னேற்றத்துக்கு அளித்த பங்களிப்பை ஆளுநர் கோஷ்யாரி பாராட்டி பேசினார். அப்போது தவறுதலாக சில கருத்துகளை தெரிவித்திருக்கலாம். இப்படி கூறியதற்காக தன்னை மகாராஷ்டிர மக்கள் பெரிய மனதுடன் மன்னிப்பார்கள்  என கோஷ்யாரி தீர்க்கமாக நம்புவதாக கூறியுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண