2019ஆம் ஆண்டிலிருந்து இதுவரை கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர்களைப் பற்றி எந்த தகவலும் மத்திய அரசிடம் இல்லை என, மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 


மத்தியில் பாஜக அரசு 2014ம் ஆண்டு முதல் ஆட்சி செய்து வருகிறது. 2019ஆம் ஆண்டு நடை பெற்ற மக்களவைத் தேர்தலிலும் தனிப் பெரும்பான்மையாக மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்தது. 2014ம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றாதில் இருந்து, அவர் ஒரு முறை கூட ஊடகவியாலாளர்களைச் சந்திக்கவில்லை என எதிர்ககட்சியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், ஆளும் அரசினை எதிர்த்து கேள்வி எழுப்பினாலோ, விமர்சித்தாலோ  நாடு முழுவதும் உள்ள ஊடகவியலாளர்களுக்கு மிரட்டல் விடுக்கப்படுவதோடு, பாதுகாப்பு என்பதே இல்லை என எதிர்கட்சியினரும் ஊடகவியலாளர்களும் குற்றம்சாட்டி வருகின்றனர். 


இந்நிலையில், இந்த ஆண்டுக்கான மழைக்கால கூட்டத்தொடரில், பிராதன எதிர்கட்சிகளில் ஒன்றான திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர், மாலா ராய், 2019ஆம் ஆண்டு முதல் இதுவரை எத்தனை ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்?, அவர்கள் கைது செய்யக் காரணம், அவர்கள் மீதுஎடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என கேள்வி எழுப்பியிருந்தார்.


அவர் எழுப்பிய கேள்விகளுக்கு, மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் அளித்துள்ள எழுத்துபூர்வ பதிலானது, ”2019ஆம் ஆண்டு முதல் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள ஊடகவியலாளர்களைப் பற்றி எந்த தகவலும் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தில் இல்லை. மேலும், காவல்துறை மற்றும் பொது ஒழுங்கு ஆகியவை அரசியல் அமைப்புச் சட்டத்தின் படி மாநில அரசின் கீழ் வருவதாகும். அதனால் மத்திய அரசிடம் அது குறித்து எந்த ஆதாரங்களும் இல்லை” என பதில் அளித்துள்ளார். 






இந்த மழைக்கால கூட்டத்தொடரில், மிக முக்கிய நிகழ்வாக குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர்  பதவிகளுக்கான தேர்தல் நடக்கவிருக்கிறது. குடியரசுத் தலைவருக்கான தேர்தல் கடந்த திங்கள் கிழமை (18/07/2022) நடைபெற்றது.  இதற்கான தேர்தல் முடிவுகள் வரும் 21ம் தேதி அறிவிக்கப்படவிருக்கின்றன. துணை தலைவருக்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் 6ம் தேதி நடைபெற இருக்கின்றன. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண