கூகுள் டூடுல் :
கூகுள் நிறுவனம் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களை கவுரவிக்கும் வகையில் அவர்களின் ஓவியங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் விதத்தில் டூடுல்களை உருவாக்கி வருகின்றன. இது நாட்டிற்கு நாடு மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய டூடுல் :
சனிக்கிழமையான இன்று கூகுள் இயற்பியலாளர் மற்றும் கணிதவியலாளரான சத்யேந்திர நாத் போஸ் மற்றும் போஸ்-ஐன்ஸ்டீன் கண்டன்சேட்டிற்கான அவரது பங்களிப்பை கவுரவித்துள்ளது.
என்ன செய்தார் சத்யேந்திர நாத் போஸ் :
1924 ஆம் ஆண்டு இந்த நாளில், அவர் தனது குவாண்டம் ஃபார்முலாவை ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு அனுப்பினார்.அவர் உடனடியாக குவாண்டம் இயக்கவியலில் ஒரு குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பு என்று அங்கீகரித்தார்.
சத்யேந்திர நாத் போஸ் பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டியவை :
சத்யேந்திர நாத் போஸ் தந்தை ஒரு கணக்காளர். அவர் தினமும் வேலைக்கு செல்வதற்கு முன்னதாக சத்யேந்திர நாத்திற்கு கடினமான கணக்கு புதிர்களை கொடுத்துவிட்டு போடுவாராம் . அதற்கு தீர்வு காண்பது போஸிற்கு பிடித்த ஒன்று.
15 வயதில், போஸ் கல்கத்தாவின் பிரசிடென்சி கல்லூரியில் இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பையும் பின்னர் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பயன்பாட்டு கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். இரண்டு பட்டங்களிலும் முதலிடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
1917 ஆம் ஆண்டின் இறுதியில், போஸ் இயற்பியல் பற்றிய விரிவுரைகளை வழங்கத் தொடங்கினார். முதுகலை மாணவர்களுக்கு பிளாங்கின் கதிர்வீச்சு சூத்திரத்தை கற்பிக்கும் போது, அவர் துகள்கள் கணக்கிடப்படும் விதத்தை கேள்விக்குள்ளாக்கினார் அது குறித்து ஆய்வுகளை நடத்த துவங்கினார்.
அவர் தனது கண்டுபிடிப்புகளை பிளாங்க்ஸ் லா மற்றும் லைட் குவாண்டா பற்றி ஆவணம் செய்தார்.மேலும் அதை தி பிலாசபிகல் மேகசின் என்ற முக்கிய அறிவியல் பத்திரிகைக்கு அனுப்பினார். ஆனால் அதனை அந்த ஆராய்சி நிறுவனம் நிராகரிக்க தொடங்கினார்.
அந்த நேரத்தில் தனது காகிதத்தை ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு அனுப்ப தைரியமான முடிவை எடுத்தார்.ஐன்ஸ்டீன் உண்மையில் கண்டுபிடிப்பின் முக்கியத்துவத்தை அங்கீகரித்தார் - விரைவில் போஸின் சூத்திரத்தை பரந்த அளவிலான நிகழ்வுகளுக்குப் பயன்படுத்தினார். போஸின் தத்துவார்த்த கட்டுரை குவாண்டம் கோட்பாட்டின் மிக முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்றாக மாறியது.
இயற்பியலுக்கான போஸின் மகத்தான பங்களிப்பை இந்திய அரசாங்கம் அங்கீகரித்ததன் மூலம் அவருக்கு நாட்டின் உயரிய விருதான பத்ம விபூஷண் விருதை வழங்கி கௌரவித்தது.
ஒரு உண்மையான பல்துறை வல்லுநராக, போஸ் இந்திய இயற்பியல் சங்கம், தேசிய அறிவியல் நிறுவனம், இந்திய அறிவியல் காங்கிரஸ் மற்றும் இந்திய புள்ளியியல் நிறுவனம் உட்பட பல அறிவியல் நிறுவனங்களின் தலைவராக பணியாற்றினார். அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் ஆலோசகராகவும் இருந்தார்.
போஸின் மரபுக்கு மரியாதை செலுத்தும் வகையில், இன்று அவரது புள்ளிவிவரங்களுடன் ஒத்துப்போகும் எந்தத் துகளும் போஸான் என்று அழைக்கப்படுகிறது.