கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சுசானா சேத், தனது 4 வயது குழந்தையை கொன்றதாக நேற்று கைது செய்யப்பட்டார். இவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்தப்பட்டு வரும் நிலையில், சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
"நான் குழந்தையை கொல்லவில்லை”
இந்த விசாரணையின்போது சுசனா சேத் தனது குழந்தையை கொல்வில்லை என்று கூறியிருக்கிறார். இதுகுறித்து போலீசார் கூறுகையில், "சுசானா சேத் தனது குழந்தையை கொல்லவில்லை என்றும் ஹோட்டல் அறையில் தூங்கி எழுந்தபோது குழந்தை இறந்துவிட்டதாகவும்” அவர் தெரிவித்திருக்கிறார். மேலும், குழந்தை இறந்த துக்கத்தில் கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றதும், அதனால்தான் ஹோட்டல் அறையில் ரத்தக்கறை படிந்து இருந்ததாகவும் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும், "கணவரால் குழந்தையும், சுசனா சேத்தும் சித்ரவதைக்கு உள்ளாகியதாகவும், சுசனா சேத்தின் கணவர் வெங்கட் ராமன் ரூ.1 கோடிக்கு மேல் சம்பாதிப்பதால் குழந்தையை கவனிப்பதற்காக ஜீவனாம்சமாக ரூ.2.5 லட்சம் கேட்டுள்ளதாகவும்" போலீசார் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனையில் இருப்பது என்ன?
பிரேத பரிசோதனை அறிக்கையில், ”குழந்தை தலையணையிலோ அல்லது ஒரு துணியிலோ அழுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. ஆனால், கழுத்தை நெரித்ததற்கான காயங்களோ அதற்கு அந்த குழந்தை போராடியதற்கான அடையாளங்களோ எதுவும் இல்லை.
குழந்தை கொல்லப்பட்டு 36 மணிநேரத்திற்கு மேல் ஆகியிருக்கிறது. குழந்தையை தலையிணை, துணியிலோ நெரித்ததுபோல் தெரியவில்லை” என்று மருத்துவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், சுசனா சேத் தங்கியிருந்த அறையை சோதனையிட்டபோது, அங்கு காலியான 2 இருமல் பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இதனால், குழந்தைக்கு இருமல் மருந்தை கொடுத்து அது மயங்கியதும் கழுத்தை நெரித்து கொன்றது தெரியவந்தது.
நடந்தது என்ன?
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் சுசானா சேத். இவர் பெங்களூருவில் ஏஐ நிறுவனத்தை நடத்தி வந்தார். இவருக்கு கடந்த 2010ஆம் ஆண்டில் திருமணம் நடந்தது. இவரது கணவர் வெங்கட்ராமன். இந்த தம்பதிக்கு கடந்த 2019ல் ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில், தான் கருத்து வேறுபாடு காரணமாக சுசனா சேத், வெங்கட்ராமன் பிரிந்துள்ளனர். சுசனா கடந்த 2020ல் கணவரை விவாகரத்து செய்ததாக தெரிகிறது.
அப்போது, குழந்தையை ஞாயிற்றுக்கிழமைகளில் பார்க்க கணவருக்கு கோர்ட் அனுமதி அளித்ததாக தெரிகிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குழந்தையை பார்க்க கணவர் வந்து செல்வதை சுசானா விரும்பவில்லை என்று தெரிகிறது. இதனால், குழந்தையுடன் கோவாவிற்கு அழைத்து சென்றிருப்பதாக தெரிகிறது.
கோவாவில் உள்ள ஹோட்டலில் தங்கிய சுசானா சேத் தனது 4 வயது மகனை கொன்று உடலை பேக்கில் வைத்து வாடகை காரில் பெங்களூரு நோக்கி வந்தபோது போலீசாரால் கைதானார். கைதான சுசானா சேத்திடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.