மத்தியப் பிரதேசம் உஜ்ஜெயினியில் உள்ளது உலகப் பிரசித்தி பெற்ற மாகாளி கோயில். முன்னதாக இந்தக் கோயில் கருவறைக்குள் பெண் ஒருவர் அபிஷேகம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலானது.


பாலிவுட் பாடலுக்கு ரீல்ஸ்


மேலும் வீடியோவில் மற்றொரு பெண் பாலிவுட் பாடல்கள் பின்னணியில் ஒலிக்க கோயிலுக்குள் சுற்றித் திரியும் நிலையில், இந்த வீடியோ இணையத்தில் பேசுபொருளானது.


இந்நிலையில் இந்த வீடியோ கோயிலை இழிவுபடுத்தும் வகையிலும், சனாதான பாரம்பரியங்களுக்கு எதிராக உள்ளதாகவும் கூறி, வீடியோ பதிவிட்ட இளம்பெண்களின் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாகாளி கோயில் அர்ச்சகர் மகேஷ் குரு முன்னதாக கோரியிருந்தார்.


இது போன்ற வீடியோக்கள் கோயிலின் புனிதத்தை அழித்துவிட்டன. மாகாளி கோயிலின் ஊழியர்களும் தங்கள் பொறுப்பை நிறைவேற்றத் தவறிவிட்டனர்” எனக் காட்டமாகத் தெரிவித்திருந்தார்.


 






இந்நிலையில் இச்சம்பவம் குறித்துப் பேசியுள்ள மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, ”இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளேன். மத நம்பிக்கைகளை எந்த வகையில் சீர்குலைப்பதையும் பொறுத்துக் கொள்ள முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.


ரன்பீர் - அலியாவுக்கு உஜ்ஜெய்ன் கோயிலில் எதிர்ப்பு


இதேபோல் முன்னதாக பிரம்மாஸ்திரா பட வெளியீட்டுக்கும் முன் உஜ்ஜெய்ன் கோயிலில் வழிபட வந்த ரன்பீர் - அலியாவுக்கு எதிராக பஜ்ரங் தள் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.


ரன்பீர் கபூர் தனது ராக்ஸ்டார் படத்தை விளம்பரப்படுத்தும் போது ​​மாட்டிறைச்சி சாப்பிடுவதை விரும்புவதாகக் கூறிய நிலையில், கோமாதாவுக்கு எதிராக தரக்குறைவான கருத்துகளை தெரிவித்ததாக கூறி ரன்பீருக்கு எதிராக கருப்புக்கொடி ஏந்தி முற்றுகை இட்டது. குறிப்பிடத்தக்கது.


நடைபாதை திட்டத்தை தொடக்கி வைத்த மோடி


முன்னதாக இக்கோயிலில் உள்ள மகா காள் நடைபாதை திட்டத்தை பிரதமர் மோடி தொடக்கி வைத்தார். இக்கோயிலை புனரமைத்து மற்றும் விரிவுபடுத்துவதற்காக ரூ. 850 கோடிரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. 


 






இந்நிலையில் முதல் கட்ட பணியான கோயிலின் நடைபாதையை, பிரதமர் மோடி அக்.11ஆம் தேதி திறந்து வைத்தார். இந்த நடைபாதையில்  (மகா காள் பாதை) சிவபெருமானின் ஆனந்த தாண்டவத்தை(நடன வடிவம்) சித்தரிக்கும் வகையில் 108 தூண்கள் உள்ளன. இந்த நடைபாதையில் சிவ புராணங்களை கூறும் வகையிலும், கணேசனின் பிறப்பு குறித்து தெரிவிக்கும் வகையிலும் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.


இத்திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக, இந்தூர் விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் மோடியை மாநில அமைச்சர்கள் நரோத்தம் மிஸ்ரா மற்றும் துளசி ராம் சிலாவா ஆகியோர் வரவேற்றனர். பின்னர் கோயிலுக்கு சென்ற பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார்.