வெளிநாடுகளில் பெண் குழந்தைகள் 15 வயது எட்டியதைக் கொண்டாடும் வித்தியாசமான விழாவாக கின்சென்யரா (quinceañera) எனும் பார்ட்டி விளங்குகிறது. நம் ஊர்களில் பூப்பெய்திய பெண்களுக்கு எடுக்கப்படும் விழாக்களை ஒத்த இந்த பார்ட்டியை லத்தீன் மக்கள் மகிழ்ச்சியாக தங்கள் பாணியில் கொண்டாடுகின்றனர்.
கொலம்பிய வேர்களைக் கொண்டுள்ள இந்தப் பண்டிகை, ஹிஸ்பானிக் அமெரிக்கா (ஸ்பானிய மொழி பரவலாகப் பேசப்படும் அமெரிக்க பகுதிகள்) முழுவதும் பரவலாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த ‘கின்சென்யரா’ பார்ட்டிக்கு முன்னதாக டீனேஜ் பெண் ஒருவர் அசத்தலாக வந்து ஸ்தம்பிக்க வைத்துள்ளார். அழகிய ஊதா நிற கவுன் அணிந்து வரும் பெண் ஒருவர் சட்டென தன் இறக்கைகளை விரித்து பட்டாம்பூச்சி கெட் அப்புக்கு மாறும் நிலையில், இந்தக் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் ஹவுஸ்டன் பகுதியைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஒருவர் பகிர்ந்துள்ள இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் லைக்ஸ் அள்ளி வருகிறது. முன்னதாக 127 மில்லியன் பார்வைகளையும் 5.9 மில்லியன் லைக்குகளையும் பெற்று வீடியோ தொடர்ந்து வைரலாகி வருகிறது.
இதே போல் கடந்த வாரம், ’ஸ்கை டைவிங்’ செய்வதற்கு முன் பெண் ஒருவர் விமானத்தில் தொங்கியபடி உடற்பயிற்சி செய்த வீடியோ, இன்ஸ்டாவாசிகளைக் கவர்ந்து லைக்ஸ் அள்ளியது.
கேட்டி வசெனினா எனும் பெண் பகிர்ந்த இந்த வீடியோவில், தான் ஸ்கை டைவிங் செய்வதற்கு முன் விமானத்தின் வெளியே உள்ள கம்பிகளில் தொங்கியபடி வயிற்றுக்கான பயிற்சிகளை அப்பெண் மேற்கொள்கிறார். தொடர்ந்து தன்னை விடுவித்துக் கொண்டு வானில் குதித்து பறவையாக மாறி ஸ்கை டைவிங் செய்கிறார்.
”ஆப்ஸ் (வயிற்றுப் பகுதிக்கான உடற்பயிற்சி) பயிற்சி செய்வதற்கான ஒரே வழி”என வசெனினா குறும்பாகப் பகிர்ந்துள்ள இந்த க்யூட்டான வீடியோ, இன்ஸ்டாகிராமில் 5 லட்சம் லைக்ஸ்களைக் கடந்து நெட்டிசன்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறது.